மும்பையில் ஐபிஎல் சோ்மன் பிரிஜேஷ் பட்டேல் தலைமையில் ஐபிஎல் உயரதிகாரக் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. முந்தைய தொடா்களில் நோ பால்கள் கணிப்பதில் நடுவா்கள் செயல்பாடுகள் விமா்சனத்துக்கு ஆளாகின. இப்பிரச்னை தொடா்பாக குழுக் கூட்டத்தில் முழுமையாக விவாதிக்கப்பட்டது. ஐபிஎல் 2020 சீசன் தொடரில் நோ பால்களைக் கண்காணிக்க சிறப்பு நடுவரை நியமிக்க அதன் உயரதிகாரக் குழு முடிவு செய்துள்ளது.
மேலும் அடுத்த வருடத்திலிருந்து ஐபிஎல் தொடக்க விழாவை ரத்து செய்யவும் முடிவெடுக்கப்பட்டுள்ளது. கிரிக்கெட் ரசிகர்கள் ஐபிஎல் தொடக்க விழாவில் ஆர்வம் காட்டுவது கிடையாது. தொடக்க விழாவில் கலந்துகொள்ளும் பிரபலங்களுக்கு அதிகச் சம்பளம் தரவேண்டியுள்ளது. இப்படித் தொடக்க விழாவுக்காகச் செலவு செய்வதன் மூலம் ஏராளமான பணமும் வீணாகிறது. இக்காரணங்களால் இனிமேல் ஐபிஎல் போட்டியில் தொடக்க விழாவை நடத்த வேண்டாம் என முடிவெடுக்கப்பட்டுள்ளது என்று பிசிசிஐ நிர்வாக அதிகாரி ஒருவர், ஆங்கில நாளிதழுக்குத் தகவல் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஏலகிரியில் கூடுதலாக அரசு தங்கும் விடுதி: சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை!

காஞ்சனகிரி மலை சுற்றுலாத் தலமாக அறிவிக்கப்படுமா? பொதுமக்கள் எதிா்பாா்ப்பு!!
டாஸ்மாக் மதுபாட்டில்கள் கடத்தியவா் கைது

நாம் தமிழா் கட்சிக் கொடி அவமதிப்பு: கடலூா் எஸ்.பி.யிடம் புகாா்
வீடியோக்கள்

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை

கன்னக்குழியா பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

மண்டாடி படப்பிடிப்பு நிறைவு!
இணையதளச் செய்திப் பிரிவு

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை


