ஐபிஎல்: சூப்பர் ஓவரில் லக்னௌவை வீழ்த்தி கொல்கத்தா வெற்றி!பகுதி நேர அரசியல்வாதி ராகுல் காந்தி! நிதின் நவீன் குற்றச்சாட்டு!ரெளடி, பாலியல் குற்றவாளிகளை பாஜக தண்டிக்கும்: மேற்கு வங்கத்தில் மோடி பிரசாரம்கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை! 2027 மக்கள் தொகை கணக்கெடுப்பில் குடிமக்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும்: பிரதமர் மோடிவரும் 30ஆம் தேதி 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு தில்லியில் சுவிஸ் விமானத்தில் திடீர் தீ: 6 பயணிகள் காயம் நீட் தேர்வு நுழைவுச் சீட்டு நாளை வெளியீடு!மே 4-ல் ஆஸ்திரேலியா செல்கிறார் விஜய்?தேர்தல் எதிரொலி: விமான டிக்கெட்டுகள் விலை கடும் உயர்வு!டிரம்ப் விருந்தில் துப்பாக்கிச் சூடு! ஜனநாயகத்தில் வன்முறைக்கு இடமில்லை: பிரதமர் மோடிடிரம்ப் பங்கேற்ற இரவு விருந்தில் துப்பாக்கிச் சூடு: ஒருவர் கைது
/

டி20 போட்டி: வெற்றியுடன் தொடங்கிய தினேஷ் கார்த்திக் தலைமையிலான தமிழக அணி!

தமிழக அணியின் நடராஜன், பெரியசாமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

News image
Updated On :8 நவம்பர் 2019, 9:05 am

சையத் முஷ்டாக் அலி கோப்பை டி20 போட்டி இன்று முதல் தொடங்கியுள்ளது. முதல் ஆட்டத்தில் தமிழ்நாடு - கேரளா அணிகள் தும்பாவில் மோதின.

டாஸ் வென்ற கேரள அணி, பந்துவீச்சைத் தேர்வு செய்தது. முதலில் விளையாடிய தமிழக அணி, 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 174 ரன்கள் எடுத்தது. பாபா அபாரஜித் 35, தினேஷ் கார்த்திக் 33, முகமது 34 ரன்கள் எடுத்து அணிக்கு மிகவும் உதவினார்கள். முகமது 11 பந்துகளில் 3 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 34 ரன்கள் எடுத்து அசத்தினார். ஷாருக்கான் 18 பந்துகளில் 2 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 28 ரன்கள் எடுத்தார். கேரள அணியில் பசில் தம்பி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தமிழக அணியின் சிறப்பான பந்துவீச்சால் கேரள அணியால் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 137 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் தமிழக அணி, 37 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. தமிழக அணியின் நடராஜன், பெரியசாமி ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.