திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள் மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் பதற்றம் மிகுந்த கவலை அளிப்பதாக வெளியுறவு அமைச்சகம் அறிக்கை!திமுக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கிற்கு 2 தொகுதிகள்துபை சர்வதேச விமான நிலையங்கள் மறு அறிவிப்பு வரும் வரை மூடல்ஈரான் மீது தாக்குதல் - அமெரிக்கா, இஸ்ரேலுக்கு உக்ரைன் ஆதரவு!மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகள்: திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீடு!அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரான் போர்: சர்வதேச அளவில் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் - பிரான்ஸ் அதிபர்!தமிழ்நாட்டில் 17 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கை: அரசுக்கு ராகுல் காந்தி வலியுறுத்தல்ஆந்திரம்: பட்டாசு ஆலை விபத்தில் பலி எண்ணிக்கை 18-ஆக உயர்வுபஹ்ரைன் நாட்டிலுள்ள தமிழர்கள் பாதுகாப்பாக உள்ளதாக தகவல்மத்திய கிழக்கு நாடுகளுக்கு விமான சேவை நிறுத்தம்!சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கை
/

ஓய்வு அறிவிப்பை வெளியிட்டார், 2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் விளையாடிய வீரர்!

2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் கும்ப்ளேவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், அந்த ஆட்டத்தில் விளையாடிய...

News image
Updated On :31 ஜனவரி 2024, 10:08 am

எழில்

2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் கும்ப்ளேவுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்காத நிலையில், அந்த ஆட்டத்தில் விளையாடிய தினேஷ் மோங்கியா ஓய்வு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளார்.

1995-96-ல் பஞ்சாப் அணிக்காக முதல் தர கிரிக்கெட்டில் அறிமுகமானார் தினேஷ் மோங்கியா. 2001-ல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு அறிமுகமான மோங்கியா, 57 ஒருநாள், 1 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். எனினும் ஒரு டெஸ்டிலும் விளையாட அவருக்கு வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இந்திய அணியின் முதல் சர்வதேச டி20 ஆட்டத்தில் இடம்பெற்ற மோங்கியா 38 ரன்கள் எடுத்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். தினேஷ் கார்த்திக் ஆட்ட  நாயகன் விருது பெற்றாலும் அந்த ஆட்டத்தில் இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் எடுத்தவர் மோங்கியா தான். 

2003 உலகக் கோப்பை இறுதிச்சுற்றில் ஆஸ்திரேலியாவுடன் மோதித் தோற்றது இந்திய அணி. இந்திய அணியில் கும்பிளேவை சேர்க்காமல் ஆல்ரவுண்டர் என்கிற காரணத்துக்காக மோங்கியாவை ஆட வைத்தார் கேப்டன் கங்குலி. பந்துவீச்சில் 7 ஓவர்கள் வீசி விக்கெட் எதுவும் எடுக்காமல் 39 ரன்கள் கொடுத்தார் மோங்கியா. பேட்டிங்கில் 12 ரன்கள் மட்டும் எடுத்தார். பிசிசிஐயால் அங்கீகரிக்காத ஐசிஎல் அமைப்பில் சேர்ந்து விளையாடியதால் பிறகு மோங்கியாவால் இந்திய அணிக்கு மீண்டும் திரும்பமுடியாமல் போனது. கடந்த வருடம் பஞ்சாப் கிரிக்கெட் சங்கத்தின் தேர்வுக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட 42 வயது மோங்கியா, தற்போது அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.