முதுகு வலி காரணமாகத் தடகள வீராங்கனை ஹிமா தாஸ், உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
கத்தார் நாட்டின் டோஹாவில் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டி வரும் 27ஆம் தேதி தொடங்கி நடைபெறுகிறது. கடந்த வாரம் நடைபெற்ற இந்திய தடகள சம்மேளனம் ஏஎப்ஐ தேர்வுக் குழுக் கூட்டத்தில் முதல் கட்டமாக பட்டியல் வெளியிடப்பட்டது. தனது விருப்ப ஓட்டமான 400 மீ-ல் தேர்வு பெற முடியாத ஹிமா தாஸ், மகளிர் 4400, கலப்பு 4400 மீ, தொடர் ஓட்டத்தில் இடம் பெற்றார். இந்நிலையில், முதுகு வலி காரணமாகத் தடகள வீராங்கனை ஹிமா தாஸ், உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகியுள்ளார்.
இதுகுறித்து இந்தியத் தடகள சங்கம் தகவல் தெரிவித்ததாவது: துரதிர்ஷ்டவசமாக, 2019 தோஹா உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் ஹிமா தாஸால் கலந்துகொள்ளமுடியவில்லை என்று கூறியுள்ளது.
கடந்த வருட ஆசிய விளையாட்டுப் போட்டிக்குப் பிறகு முதுகு வலி காரணமாக அவதிப்படுகிறார் ஹிமா தாஸ். ஏப்ரலில் தோஹாவில் நடைபெற்ற ஆசியன் சாம்பியன்ஷிப் போட்டியில் 400 மீ. ஓட்டப்பந்தயத் தகுதிச்சுற்றில் காயம் காரணமாகப் பாதி ஓட்டத்திலிருந்து விலகினார். பிறகு ஜூலை முதல் ஆகஸ்ட் வரை கலந்துகொண்ட போட்டிகளில் 6 தங்கப் பதக்கங்களை வென்றார். எனினும் தற்போது அவரால் உலகத் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் கலந்துகொள்ளமுடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஆண்டிமடம் அருகே சுமை ஆட்டோ தீப்பிடித்து விபத்து ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருள்கள் எரிந்து நாசம்

உணவகத்தில் அராஜகம்: சிறுவன் உள்ளிட்ட இருவா் கைது

காரைக்கால் அருகே மீனவா் தற்கொலை

மாடியிலிருந்து தவறி விழுந்த முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

உன்னை நம்பி பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு
3 நாள்களுக்குள் ஈரான் எண்ணெய் உள்கட்டமைப்புகள் வெடிக்கும்! Trump எச்சரிக்கை
இணையதளச் செய்திப் பிரிவு

சூப்பர் ஓவரில் சொதப்பிய பூரன் | IPL 2026 | kkr vs lsg | Nicholas Pooran | Super Over
தினமணி செய்திச் சேவை

வெள்ளிச்சுடரே பாடல்!
தினமணி செய்திச் சேவை


