மதுரை மத்திய தொகுதியில் சுந்தர். சி போட்டி!ஏப். 1 முதல் பெட்ரோல் ஏற்றுமதி இல்லை! ரஷியா அறிவிப்புபோதுமான உரம் கையிருப்பு: மக்களவையில் அமைச்சா் தகவல்மாநிலங்களுக்கான வணிக எரிவாயு ஒதுக்கீடு 70%-ஆக அதிகரிப்பு6 நிறுவனங்களின் ஐபிஓக்கு செபி அனுமதிஏப். 17 முதல் கோடை விடுமுறை: ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு குழாய் வழி இயற்கை எரிவாயு பெற விநியோக நிறுவனங்களை தொடா்பு கொள்ளலாம்: தமிழக அரசுசட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

3-வது டி20 ஆட்டத்தில் அபார வெற்றி கண்ட தென் ஆப்பிரிக்கா! (ஹைலைட்ஸ் விடியோ)

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் கேப்டன் டி காக்கின் அதிரடி ஆட்டத்தால் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் சமன் செய்தது

News image
Updated On :23 செப்டம்பர் 2019, 5:37 am

எழில்

இந்தியாவுக்கு எதிரான கடைசி டி20 ஆட்டத்தில் கேப்டன் டி காக்கின் அதிரடி ஆட்டத்தால் 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று தொடரையும் சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா. டி காக் அதிரடியாக ஆடி 79 ரன்களை விளாசினார்.

2020-இல் நடக்கவுள்ள டி20 உலகக் கோப்பைக்கு தயாராகும் வகையில் இந்திய-தென் ஆப்பிரிக்க அணிகள் பங்கேற்றுள்ள 3 ஆட்டங்கள் டி20 தொடர் நடைபெறுகிறது. இதில் முதல் ஆட்டம் மழையால் ரத்தானது. இரண்டாவது ஆட்டத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இதன் தொடர்ச்சியாக கடைசி ஆட்டம் பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. டாஸ் வென்ற இந்தியா பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் விளையாடி, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களையே எடுத்தது இந்தியா.

135 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா, 16.5 ஓவர்களில் 140/1 ரன்களை எடுத்து 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது. இந்த ஆட்டத்தின் ஹைலைட்ஸ்:

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.