தடை அபாயத்தில் விராட் கோலி: விதிமுறை மீறிய குற்றத்துக்காக அபராதப் புள்ளி வழங்கிய ஐசிசி!

அவர் ஐசிசி விதிமுறைகளை மீறியதாக நடுவர்களால் குற்றம் சாட்டப்பட்டது.
தடை அபாயத்தில் விராட் கோலி: விதிமுறை மீறிய குற்றத்துக்காக அபராதப் புள்ளி வழங்கிய ஐசிசி!

பெங்களூருவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற இறுதி டி20 ஆட்டத்தில் இந்தியாவை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை சமன் செய்தது தென் ஆப்பிரிக்கா. கேப்டன் டிகாக் அபாரமாக ஆடி 79 ரன்களுடன் அவுட்டாகாமல் இருந்தார்.  இரு அணிகளும் பேடிஎம் கோப்பையை சமமாக பகிர்ந்து கொண்டன.

இந்த ஆட்டத்தின்போது இந்திய அணியின் இன்னிங்ஸில் ஐந்தாவது ஓவரை வீசினார் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சாளர் ஹெண்ட்ரிக்ஸ். அப்போது அந்தப் பந்தை டீப் மிட்விக்கெட்டுக்கு புல் செய்த கோலி, ரன் எடுக்கும்போது பந்துவீச்சாளரின் தோள்பட்டையை இடித்தபடி ஓடினார். இதையடுத்து அவர் ஐசிசி விதிமுறைகளை மீறியதாக நடுவர்களால் குற்றம் சாட்டப்பட்டது.

இதையடுத்து ஆட்ட நடுவரின் முடிவின்படி, விராட் கோலிக்கு ஒரு அபராதப் புள்ளியும் எச்சரிக்கையும் வழங்கப்பட்டுள்ளன. 2016 செப்டம்பர் முதல், விராட் கோலி மூன்றாவது முறையாக இதுபோல ஐசிசி விதிமுறைகளை மீறியுள்ளார். மூன்றிலும் தலா ஒரு அபராதப் புள்ளியைப் பெற்றுக்கொண்ட கோலி, இதுவரை மூன்று அபராதப் புள்ளிகளை தன் வசம் வைத்துள்ளார். குறிப்பிட்ட 24 மாதக் காலத்துக்குள் ஒரு வீரர் நான்கு அபராதப் புள்ளியைப் பெற்றுக்கொண்டால், அவர் அடுத்து வரும் ஆட்டத்தில் பங்கேற்கத் தடை விதிக்கப்படும். இதனால் அடுத்து விளையாடும் ஆட்டங்களில் ஐசிசி விதிமுறையை விராட் கோலி மீறும்பட்சத்தில் அவருக்கு இதைவிடவும் பெரிய தண்டனை வழங்கப்படும் எனத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com