கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜம், களத்தில் செயல்பாடு தான் முக்கியம்: கபில் தேவ்

ஒவ்வொருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜமானது என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். 
கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜம், களத்தில் செயல்பாடு தான் முக்கியம்: கபில் தேவ்
Updated on
1 min read

ஒவ்வொருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜமானது என முன்னாள் கேப்டன் கபில் தேவ் தெரிவித்துள்ளார். 

இந்திய அணியின் புதிய பயிற்சியாளர்களை தேர்வு செய்வதற்காக கபில்தேவ், அன்ஷுமன் கெய்க்வாட், சாந்தா ரங்கசாமி ஆகியோர் கொண்ட கிரிக்கெட் ஆலோசனைக் குழுவை பிசிசிஐ சிஏசி நியமித்துள்ளது.

இந்நிலையில், கேப்டன் விராட் கோலி மற்றும் துணைக் கேப்டன் ரோஹித் ஷர்மா விவகாரம் தொடர்பாக கபில் தேவ் கூறுகையில்,

ஒவ்வொருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்படுவது சகஜமானது. இருப்பினும் களத்தில் அவர்கள் எவ்வாறு செயல்படுகிறார்கள் என்பதுதான் முக்கியமானது. ஏனென்றால் அணியின் செயல்பாடுகள் தொடர்பாக தனிநபர் கருத்துக்கள் இருக்கலாம். ஆனாலும், களத்தில் தனது அணியை வெற்றிபெற வைக்கும் எண்ணம் மட்டுமே இருக்க வேண்டும்.

கருத்து வேறுபாடுகளால் ஒருவர் மற்றவரை தாழ்த்துகிறார் என்று அர்த்தமில்லை. இதில் ஊடகங்களும் சரியான தகவலை செய்தியாக வெளியிட வேண்டும், தேவையற்ற வதந்திகளைப் பரப்ப வேண்டாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com