டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நவம்பர் 10-இல் ஐபிஎல் இறுதி ஆட்டம்: ஆட்சிமன்றக் குழு முடிவு

​2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறும் என ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு முடிவு செய்துள்ளது.

News image
​2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறும் என ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு முடிவு செய்துள்ளது.
Updated On :2 ஆகஸ்ட் 2020, 3:58 pm

DIN


2020 ஐபிஎல் கிரிக்கெட் தொடர் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடைபெறும் என ஐபிஎல் ஆட்சிமன்றக் குழு முடிவு செய்துள்ளது.

2020-ம் ஆண்டின் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், ஐபிஎல் ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காணொலி வாயிலாக கூடியது. இந்தக் கூட்டத்தின் முடிவில் ஐபிஎல் கிரிக்கெட் தொடரை செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடத்த முடிவெடுக்கப்பட்டது. 

இதில் பெயர் தெரிவிக்க விரும்பாத ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் பற்றி பிடிஐ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்ததாவது:

"அனைத்து ஸ்பான்சர்களும் தக்கவைக்கப்பட்டுள்ளனர். எங்களுக்குத் தேவையான அனுமதிகளை மத்திய உள்துறை அமைச்சகமும், வெளியுறவுத் துறை அமைச்சகமும் ஒரு வாரத்துக்குள் அளித்துவிடும் என்று எதிர்பார்க்கிறோம். தீபாவளி வாரம் தொடங்குவதால், ஒளிபரப்பு நிறுவனங்களுக்கு லாபம் கிடைக்கும் வகையில் நவம்பர் 10-ம் தேதி இறுதி ஆட்டம் நடைபெறவுள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் இன்னும் தயாரிக்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்த ஆண்டு கரோனா பாதிப்புக்கு எத்தனை வீரர்களை வேண்டுமானாலும் மாற்றிக்கொள்ளலாம். அதேசமயம், ஐக்கிய அரபு அமீரகத்தில் மருத்துவ வசதியை ஏற்படுத்துவது பற்றி துபை சார்ந்த நிறுவனத்திடமிருந்து பிசிசிஐ-க்கு விளக்கக் காட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன." என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.