டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஐபிஎல் ஸ்பான்சர்: விவோ விலக முடிவு!

ஐபிஎல் போட்டிக்கு ஸ்பான்சராக உள்ள விவோ நிறுவனம் இந்த வருடம் மட்டும் விலகவுள்ளதாக பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளது.

News image
Updated On :4 ஆகஸ்ட் 2020, 11:36 am

DIN

அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரை ஆஸ்திரேலியாவில் நடைபெறவிருந்த டி20 உலகக் கோப்பை அடுத்த வருடத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. 53 நாள்கள் போட்டி நடைபெறுகிறது.

இந்த வருட ஐபிஎல் போட்டி குறித்து விவாதிப்பதற்காக கடந்த ஞாயிறு அன்று ஐபிஎல் ஆட்சி மன்றக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 

ஐபிஎல் ஸ்பான்சராக விவோ என்கிற சீன நிறுவனத்துடனான ஒப்பந்தம் தொடரும் என பிசிசிஐ அறிவித்தது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கு ஸ்பான்சராக உள்ள விவோ நிறுவனம் இந்த வருடம் மட்டும் விலகவுள்ளதாக பிசிசிஐயிடம் தெரிவித்துள்ளது.

லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் இந்திய-சீன வீரா்களுக்கு இடையே ஜூன் மாதம் திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் இரு தரப்பைச் சோ்ந்த ராணுவ வீரா்களும் மோதிக் கொண்டனா். இந்தச் சம்பவத்தில் தமிழகத்தின் ராமநாதபுரத்தைச் சோ்ந்த பழனி உள்பட 20 ராணுவ வீரா்கள் வீர மரணமடைந்ததாக இந்திய ராணுவம் அறிவித்தது. அதேபோல சீன ராணுவத்திலும் கடும் உயிா்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து சீனப் பொருள்களை இந்தியர்கள் வாங்கக் கூடாது, விற்பனை செய்யக்கூடாது என்கிற கோரிக்கைகள் வலுத்துள்ள நிலையில் ஐபிஎல் ஸ்பான்சராக விவோ நிறுவனம் தொடரும் என பிசிசிஐ அறிவித்ததற்கு எதிர்ப்பு கிளம்பியது.

புதிய திருப்பமாக, ஐபிஎல் ஸ்பான்சராக இந்த வருடம் விவோ நிறுவனம் செயல்படப் போவதில்லை என முடிவெடுத்துள்ளது. ஆனால் அடுத்த வருடம் மீண்டும் ஐபிஎல் ஸ்பான்சராக நீடிக்கவும் 2023 வரை ஐபிஎல்-லுடனான கூட்டணியைத் தொடரவும் விருப்பம் தெரிவித்துள்ளது. இதனால் பிசிசிஐக்குப் புதிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இந்த வருட ஐபிஎல் போட்டிக்கான ஸ்பான்சரை உடனடியாக தேடிப் பிடிக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.