டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

ஐபிஎல் நடத்த மத்திய அரசு அதிகாரப்பூர்வ அனுமதி: பிரிஜேஷ் படேல்

​ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த மத்திய அரசிடமிருந்து அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைத்துள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

News image
​ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த மத்திய அரசிடமிருந்து அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைத்துள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.
Updated On :10 ஆகஸ்ட் 2020, 1:15 pm

DIN


ஐபிஎல் கிரிக்கெட் தொடரை நடத்த மத்திய அரசிடமிருந்து அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைத்துள்ளதாக ஐபிஎல் தலைவர் பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல், மே மாதங்களில் நடைபெறவிருந்த ஐபிஎல் கிரிக்கெட் தொடர் ஒத்திவைக்கப்பட்டது. இதையடுத்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் செப்டம்பர் 19 முதல் நவம்பர் 10 வரை நடத்த பிசிசிஐ திட்டமிட்டது. வெளிநாடுகளில் கிரிக்கெட் தொடரை நடத்த மத்திய உள்துறை, வெளியுறவுத் துறை மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சகங்களின் அனுமதி தேவை. இதில் விளையாட்டுத் துறை அமைச்சகத்திடமிருந்து ஏற்கெனவே அனுமதி வழங்கப்பட்டுவிட்டது. 

இந்த நிலையில், மத்திய உள்துறை மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சகங்களிடமிருந்து அதிகாரப்பூர்வமாக அனுமதி கிடைத்துள்ளதாக பிரிஜேஷ் படேல் தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.