கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் தரவரிசை: முதல் 10 இடங்களில் மூன்று இங்கிலாந்து வீரர்கள்

ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஆல்ரவுண்டர்களுக்கான பிரிவில்...

News image
Updated On :11 ஆகஸ்ட் 2020, 9:39 am

DIN

பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து அணி. இதையடுத்து ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியலில் ஆல்ரவுண்டர்களுக்கான பிரிவில் முதல் 10 இடங்களில் மூன்று இங்கிலாந்து வீரர்கள் உள்ளார்கள்.

டெஸ்ட் ஆல்ரவுண்டர்கள் வரிசையில் முதல் இடத்தில் பென் ஸ்டோக்ஸ் உள்ளார். 7-ம் இடத்தில் வோக்ஸூம் 10-ம் இடத்தில் பிராடும் உள்ளார்கள். இந்தப் பட்டியலில் வோக்ஸ் இரு இடங்களும் பிராட் ஒரு இடமும் முன்னேறியுள்ளார்கள். இதனால் வலுவான ஆல்ரவுண்டர்கள் உள்ள அணியாக உள்ளது இங்கிலாந்து.

இந்திய வீரர்கள் ஜடேஜா மற்றும் அஸ்வின் ஆகியோர் இப்பட்டியலில் முறையே 3-ம் மற்றும் 5-ம் இடங்களைப் பிடித்துள்ளார்கள். 

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்டை வென்றதன் மூலம் விஸ்டன் கோப்பையைக் கைப்பற்றிய இங்கிலாந்து அணி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப் பட்டியலில் 3-வது இடத்துக்கு முன்னேறியது. இந்த டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு முன்பு 146 புள்ளிகளுடன் 4-ம் இடத்தில் இருந்தது. ஆனால் இரு டெஸ்டுகளில் வெற்றி பெற்று 80 புள்ளிகளைச் சேர்த்துக்கொண்டது. இதனால் 226 புள்ளிகளுடன் இந்தியா (360), ஆஸ்திரேலியா (296) ஆகிய அணிகளுக்கு அடுத்ததாக 3-ம் இடத்தைப் பிடித்தது. பாகிஸ்தானுக்கு எதிரான முதல் டெஸ்டில் வெற்றி பெற்றதன் மூலம் கூடுதலாக 40 புள்ளிகளைப் பெற்று தற்போது 266 புள்ளிகளுடன் தொடர்ந்து 3-வது இடத்தில் இங்கிலாந்து அணி உள்ளது. இன்னொரு டெஸ்டில் வெற்றி பெற்றால் ஆஸ்திரேலிய அணியைப் பின்னுக்குத் தள்ளி 2-ம் இடத்தை இங்கிலாந்து அணி பிடித்துவிடும். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.