மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

சென்னைக்கு வந்தார் தோனி: நாளை முதல் பயிற்சி முகாமில் பங்கேற்பு

ஐபிஎல் போட்டிக்கான பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்துள்ளார் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2020, 11:32 am

DIN

ஐபிஎல் போட்டிக்கான பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்துள்ளார் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி.

இந்த வருட ஐபிஎல் போட்டி ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ளது. செப்டம்பர் 19 (சனிக்கிழமை) அன்று தொடங்கும் ஐபிஎல் போட்டி நவம்பர் 10 (செவ்வாய்) அன்று முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜாவில் 53 நாள்களுக்கு 60 ஆட்டங்கள் நடைபெறுகின்றன. 

ஐபிஎல் போட்டியில் பங்கேற்பதற்காக சென்னை சூப்பர் கிங்ஸ் வீரர்கள் சென்னையில் சில நாள்களுக்குப் பயிற்சியில் ஈடுபடவுள்ளார்கள். தோனி, ரெய்னா உள்ளிட்ட சிஎஸ்கே வீரர்கள் சென்னையில் பயிற்சியில் ஈடுபட தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது. 

சென்னைப் பயிற்சி முகாமில் கலந்துகொள்வதற்கு முன்பாக ராஞ்சியில் கரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளார் தோனி. இதன் முடிவில் தோனிக்கு கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது.

இந்நிலையில் ஐபிஎல் போட்டிக்கான பயிற்சி முகாமில் பங்கேற்பதற்காக சென்னைக்கு வந்துள்ளார் சிஎஸ்கே அணி கேப்டன் தோனி.

ஆகஸ்ட் 15 முதல் 20 வரை சிஎஸ்கே வீரர்கள், சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் பயிற்சியில் ஈடுபடவுள்ளார்கள். பிறகு, சிஎஸ்கே வீரர்கள் சென்னையிலிருந்து துபைக்கு ஆகஸ்ட் 21 அன்று செல்லவுள்ளார்கள். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.