மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்கள்: ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு!

ஆஸ்திரேலிய அணி ஆகஸ்ட் 24 அன்று இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளது.

News image
Updated On :14 ஆகஸ்ட் 2020, 12:07 pm

DIN

இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள், டி20 தொடர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், இங்கிலாந்தில் நடைபெறவுள்ள இங்கிலாந்து - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான ஒருநாள், டி20 தொடர் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரு அணிகளும் 3 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களில் பங்கேற்கின்றன.

செப்டம்பர் 4, 6, 8 தேதிகளில் செளதாம்ப்டனில் டி20 தொடரும் செப்டம்பர் 11, 13, 16 தேதிகளில் மான்செஸ்டரில் ஒருநாள் தொடரும் நடைபெறவுள்ளன. ஒருநாள் தொடர் உலகக் கோப்பை சூப்பர் லீக்கில் இடம்பெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

ஆஸ்திரேலிய அணி ஆகஸ்ட் 24 அன்று இங்கிலாந்துக்குச் செல்லவுள்ளது.

இந்நிலையில் ஒருநாள், டி20 தொடர்களில் விளையாடவுள்ள ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேக்ஸ்வெல் ஆகிய இருவரும் ஒருநாள் அணியில் இடம்பெற்றுள்ளார்கள். டார்சி ஷார்ட், உஸ்மான் கவாஜா, பென் மெக்டர்மாட், டிராவிஸ் ஹெட், மைக்கேல் நாசிர் ஆகியோர் அணியில் இடம்பெறவில்லை. 

ஆஸ்திரேலிய அணி

ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), பேட் கம்மின்ஸ் (துணை கேப்டன்), டேவிட் வார்னர், மார்னஸ் லபுஷானே, ஜோஷ் பிலிப், ஸ்டீவ் ஸ்மித், மேத்யூ வேட், அலெக்ஸ் கேரி, கிளென் மேக்ஸ்வெல், மிட்செல் மார்ஷ், மார்கஸ் ஸ்டாய்னிஸ், டேனியல் சாம்ஸ், ஆஷ்டன் அகர், நாதன் லயன், ஆடம் ஸம்பா, மிட்செல் ஸ்டார்க், சீன் அபாட், ஜோஷ் ஹேஸில்வுட், ரிலி மெர்டித், கேன் ரிச்சர்ட்சன், ஆண்ட்ரூ டை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.