மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

கடைசியாக ஒரு சர்வதேச ஆட்டத்தில் விளையாடுவாரா தோனி?

​சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனியை கௌரவிக்கும் வகையில், அவருக்காக கடைசியாக ஒரு ஆட்டம் நடத்த வேண்டும் என ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :16 ஆகஸ்ட் 2020, 10:35 am

DIN


சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற தோனியை கௌரவிக்கும் வகையில், அவருக்காக கடைசியாக ஒரு ஆட்டம் நடத்த வேண்டும் என ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் விருப்பம் தெரிவித்துள்ளார்.

இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாக நேற்று (சனிக்கிழமை) அறிவித்தார். கடந்தாண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதி ஆட்டம்தான் தோனி கடைசியாக விளையாடிய சர்வதேச கிரிக்கெட் ஆட்டம்.

இதைத் தொடர்ந்து, தோனிக்காக கடைசியாக ஒரு சர்வதேச ஆட்டத்துக்கு ஏற்பாடு செய்ய வேண்டும் என ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் விருப்பம் தெரிவித்துள்ளார். தோனியின் பயிற்சியாளரும் ஹேமந்த் சோரனின் விருப்பத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

ஆனால், தோனிக்கான கடைசி சர்வதேச ஆட்டத்துக்கு வாய்ப்பில்லை என்று ஐபிஎல் முன்னாள் தலைவர் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளார்.

இதுபற்றி சுக்லா தெரிவித்ததாவது:

"தன்னுடைய கடைசி ஆட்டத்துக்கான எந்தவொரு விருப்பத்தையும் பிசிசிஐ-யிடம் தோனி வெளிப்படுத்தவில்லை. அவர் இந்தக் கோரிக்கையை எழுப்பாததால், அவருக்கான கடைசி ஆட்டம் குறித்த பேச்சுக்கே இடமில்லை." என்றார் ராஜீவ் சுக்லா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.