தோனியின் இந்தச் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது: கம்பீர் சவால்!
மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற தோனியின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என...


மூன்று ஐசிசி கோப்பைகளை வென்ற தோனியின் சாதனையை யாராலும் முறியடிக்க முடியாது என முன்னாள் வீரர் கம்பீர் கூறியுள்ளார்.
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுவதாகக் கடந்த சனிக்கிழமையன்று அறிவித்தார்.
இந்நிலையில் முன்னாள் வீரர் கெளதம் கம்பீர் ஒரு பேட்டியில் கூறியதாவது:
ஒருநாள் உலகக் கோப்பை, டி20 உலகக் கோப்பை, சாம்பியன் கோப்பை என மூன்று ஐசிசி கோப்பைகளை தோனி வென்றுள்ளார். இதை யாராலும் முறியடிக்க முடியாது. இந்தச் சாதனை அவர் வசமே இருக்கும். இதை நான் சவாலாகவே சொல்வேன்.
சதங்களின் சாதனைகள் முறியடிக்கப்படலாம். ரோஹித் சர்மா அடித்த இரட்டைச் சதங்களை விடவும் அதிக எண்ணிக்கையில் ஒருவர் இரட்டைச் சதங்களை அடிக்கலாம். ஆனால் எந்தவொரு இந்திய கேப்டனாலும் தோனியின் சாதனையை வீழ்த்த முடியாது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...