நானும் இத்தாலியும் எதற்கும் கெஞ்ச மாட்டோம்! டிரம்ப்பின் பேச்சுக்கு மெலோனி கண்டனம்! ஜப்பானில் தொடக்கப் பள்ளியில் பயங்கர தீவிபத்து: 11 பேர் காயம் நீட்: மனநல ஆலோசனைக்கு உதவி எண்கள் அறிவிப்பு பசுமை ஆற்றல் வளர்ச்சியை வலுப்படுத்த 5 புதிய மண்டலங்கள்: அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் பாராட்டுக்குரியது: கமல்ஆசிரியர் தகுதித்தேர்வு ஹால் டிக்கெட் வெளியீடு லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 16 பேர் பலி! தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!
/

சிக்ஸர் அடித்து தன் காரின் கண்ணாடியையே சுக்குநூறாக உடைத்த கிரிக்கெட் வீரர்!

வேறுவிதமாக காரின் கண்ணாடி உடைந்திருந்தால் வருத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இது அவருடைய திறமைக்கான சான்று அல்லவா...

News image
Updated On :28 ஆகஸ்ட் 2020, 1:49 pm IST

ஒரு கிரிக்கெட் வீரர் அடிக்கும் சிக்ஸர், மைதானத்தைத் தாண்டி வெளியே விழுந்தால் அதைவிட அந்த வீரருக்கு வேறு என்ன பெருமை இருக்க முடியும்?

கிரிக்கெட் திறமை, வலிமையான உடற்தகுதி இரண்டையும் நிரூபிக்கும் தருணம் அது.

ஆனால் அப்படி அடிக்கும் சிக்ஸர், பேட்ஸ்மேனின் காரின் மீதே விழுந்து கண்ணாடியைச் சுக்கு நூறாக உடைத்தால்?

அப்படியொரு விநோத சம்பவம் அயர்லாந்தில் நடைபெற்றுள்ளது.

அயர்லாந்தில் நடைபெற்ற டி20 ஆட்டத்தில் லீன்ஸ்டர் அணியில் இடம்பெற்ற 36 வயது கெவின் ஓ பிரையன் 37 பந்துகளில் 8 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 82 ரன்கள் குவித்தார். இதில்தான் கெவின் ஓ பிரையன் அடித்த ஒரு சிக்ஸர் மைதானத்துக்கு வெளியே சென்று பார்க்கிங் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த அவருடைய டொயாட்டோ காரின் மீது விழுந்ததில் பின்பகுதிக் கண்ணாடி உடைந்து சிதறியுள்ளது.

ஆட்டம் முடிந்து வந்து தன் காரைப் பார்வையிட்ட ஓ பிரையன், பின்பகுதிக் கண்ணாடி முழுவதுமாக உடைந்திருந்ததைப் பார்த்து ஆச்சர்யப்பட்டார். வேறுவிதமாக காரின் கண்ணாடி உடைந்திருந்தால் வருத்தப்பட்டிருக்கலாம். ஆனால் இது அவருடைய திறமைக்கான சான்று அல்லவா! அதனால் சிக்ஸரால் உடைந்த காரின் கண்ணாடி அருகே அமர்ந்து பெருமையுடன் புகைப்படங்களுக்கு போஸ் கொடுத்து இத்தருணத்தைக் கொண்டாட்டமாக மாற்றிக்கொண்டார்.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.