பயிற்சி ஆட்டம்: முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய ஏ அணி முன்னிலை!
2-ம் நாளில் ஆஸ்திரேலிய ஏ அணி 85 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்துள்ளது.


இந்தியன்ஸ் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தின் 2-ம் நாளில் ஆஸ்திரேலிய ஏ அணி 85 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்துள்ளது.
சிட்னியில் நடைபெறும் இந்த 3 நாள் ஆட்டத்தின் முதல் நாளில் டாஸ் வென்ற இந்தியன்ஸ் அணி பேட்டிங் செய்யத் தீா்மானித்தது. முதல் நாள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 237 ரன்கள் எடுத்தது. இந்நிலையில் கூடுதலாக 10 ரன்கள் சேர்த்து முதல் இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது இந்தியன்ஸ் அணி. கேப்டன் ரஹானே, 117 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். புஜாரா 54, உமேஷ் யாதவ் 24 ரன்கள் எடுத்தார்கள்.
பிறகு தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய ஆஸ்திரேலிய ஏ அணி, 2-ம் நாள் ஆட்ட முடிவில் 85 ஓவர்களுக்கு 8 விக்கெட் இழப்புக்கு 286 ரன்கள் எடுத்து முன்னிலை பெற்றுள்ளது. கிரீன் 114 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளார். டிம் பெயின் 44 ரன்கள் எடுத்தார். இந்திய அணித் தரப்பில் உமேஷ் யாதவ் 3 விக்கெட்டுகளும் சிராஜ், அஸ்வின் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...