பகலிரவு பயிற்சி ஆட்டம்: இந்திய அணி முதலில் பேட்டிங்
தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா 40 ரன்களிலும் மயங்க் அகர்வால் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள்.


இந்தியன்ஸ் - ஆஸ்திரேலியா ஏ ஆகிய அணிகள் மோதும் பகலிரவு பயிற்சி ஆட்டம் சிட்னி மைதானத்தில் இன்று தொடங்கியுள்ளது.
ஆஸ்திரேலியாவுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டெஸ்ட், ஒருநாள், டி20 தொடா்களில் விளையாடுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடரை 1-2 எனத் தோற்றது இந்திய அணி. எனினும் டி20 தொடரை 2-1 என வென்றது.
டிசம்பர் 17 முதல் டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. அதற்கு முன்பு இந்திய அணி இரு மூன்று நாள் பயிற்சி ஆட்டங்களில் விளையாடுகிறது. முதல் பயிற்சி ஆட்டம் டிரா ஆனது.
இன்று தொடங்கிய 2-வது பயிற்சி ஆட்டத்தில் டாஸ் வென்ற ரஹானே தலைமையிலான இந்தியன்ஸ் அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்தது.
தொடக்க வீரர்கள் பிரித்வி ஷா 40 ரன்களிலும் மயங்க் அகர்வால் 2 ரன்களிலும் ஆட்டமிழந்தார்கள்.
இந்திய அணி 14 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்துள்ளது. ஷுப்மன் கில் 36, விஹாரி 8 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...