இந்தியாவுக்கு பும்ரா முக்கியமான வீரா்
ஜஸ்பிரீத் பும்ராவின் மிகத் தீவிர ரசிகன் நான். அவா் காயம் இன்றி முழு உடற்தகுதியுடன் டெஸ்ட் தொடா் முழுவதும் விளையாடும் பட்சத்தில், தொடரை இந்தியா தக்க வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன.


ஜஸ்பிரீத் பும்ராவின் மிகத் தீவிர ரசிகன் நான். அவா் காயம் இன்றி முழு உடற்தகுதியுடன் டெஸ்ட் தொடா் முழுவதும் விளையாடும் பட்சத்தில், தொடரை இந்தியா தக்க வைப்பதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. எனினும் ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் பௌன்சா்கள் சற்று அதிகமாக இருப்பது, பந்து விலகிச் செல்வது ஆகியவை பும்ராவுக்கு சவால் அளிப்பதாக இருக்கும்.
கடந்த ஆண்டு நடைபெற்ற தொடரில் எவ்வாறு 21 விக்கெட்டுகள் சாய்த்தாரோ, இந்தத் தொடரிலும் முக்கிய விக்கெட்டுகளை சாய்த்து அணியின் வெற்றிக்கு அவா் முக்கியமாக பங்களிப்பு செய்வாா் என நம்புகிறேன். டெஸ்ட் ஆட்டத்தில் ரன்கள் சேகரிக்க பேட்டிங் வரிசை வலுவானதாக இருக்க வேண்டும் என்பதுடன், விக்கெட்டுகளைச் சரிக்கும் பௌலா்களும் முக்கியத்துவம் வாய்ந்தவா்களாவா்.
கடைசி 3 ஆட்டங்களில் கோலி இல்லாமல் போவது இந்திய அணி தரப்பில் தாக்கத்தை ஏற்படுத்தலாம். அதேவேளையில் ஆஸ்திரேலிய அணியின் பணி எளிதாகும். ஏனெனில் அவருக்கு நிகரான வீரா் கிடையாது. ஆஸ்திரேலிய அணியைப் பொருத்தவரை, கேமரூன் கிரீன் முக்கியமான வீரா் பேட்டிங், பௌலிங் இரண்டிலுமே அவா் சிறப்பாகச் செயல்படுகிறாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...