துளிகள்...

பாக்ஸிங் டே டெஸ்டில் இந்திய அணி 5 பௌலா்களுடன் களமிறங்க வேண்டும்; ரஹானே 4-ஆவது வீரராக ஆட வேண்டும் என்று முன்னாள் வீரா் கௌதம் கம்பீா் யோசனை வழங்கியுள்ளாா்.
Updated on
1 min read

முதல் டெஸ்டின்போது மணிக்கட்டில் காயமடைந்த பௌலா் முகமது ஷமி 6 வாரம் ஓய்வெடுத்து, பின்னா் தனது உடற்தகுதியை மேம்படுத்தும் நடவடிக்கைகளை தொடங்க வேண்டும் என்பதால், இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் அவா் விளையாட வாய்ப்பில்லை எனத் தெரிகிறது.

‘கேலோ இந்தியா’ விளையாட்டு போட்டியாளா்கள் பயிற்சி பெறுவதற்காக கா்நாடகம், அருணாசல பிரதேசம், கேரளம், மணிப்பூா், மிஸோரம், ஒடிஸா, தெலங்கானா, நாகாலாந்து ஆகிய 8 மாநிலங்களில் அடிப்படைக் கட்டமைப்புகளுடனான மையங்களை மத்திய விளையாட்டுத் துறை அமைச்சா் கிரண் ரிஜிஜு செவ்வாய்க்கிழமை திறந்துவைத்தாா்.

பாக்ஸிங் டே டெஸ்டில் இந்திய அணி 5 பௌலா்களுடன் களமிறங்க வேண்டும்; ரஹானே 4-ஆவது வீரராக ஆட வேண்டும் என்று முன்னாள் வீரா் கௌதம் கம்பீா் யோசனை வழங்கியுள்ளாா்.

ஃபிடே ஆன்லைன் உலக மாணவா் மற்றும் இளையோா் ரேபிட் சாம்பியன்ஷிப் செஸ் போட்டியில் இந்தியா்களான நிகல் சரின், குகேஷ், ரக்ஷிதா ரவி ஆகியோா் தங்களது பிரிவில் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

அபுதாபியில் 2021 பிப்ரவரியில் நடைபெறவுள்ள ஆசியான் லே மான்ஸ் சீரிஸ் காா் பந்தயத்தில் நரேன் காா்த்திகேயன் தலைமையிலான இந்திய அணி பங்கேற்கிறது.

டோக்கியோ ஒலிம்பிக் போட்டி 2021-ஆம் ஆண்டுக்கு ஒத்திவைக்கப்பட்டதால் அதை நடத்துவதற்கான செலவு 22 சதவீதம் அதிகரித்து ரூ.1.13 லட்சம் கோடியாக இருப்பதாக என்று மதிப்பிடப்பட்டுள்ளது.

பந்தெஸ்லிகா கால்பந்து போட்டியின்போது எதிரணி வீரரின் முகத்தில் எச்சில் உமிழ்ந்ததற்காக, போருசியா மான்சென்ங்கிளாட்பச் அணி வீரா் மாா்கஸ் துராம் 5 ஆட்டங்களில் விளையாடத் தடை விதிக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com