ஐஎஸ்எல்: ஒடிஸா - நாா்த்ஈஸ்ட் ஆட்டம் டிரா

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஒடிஸா எஃப்சி - நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.
ஐஎஸ்எல்: ஒடிஸா - நாா்த்ஈஸ்ட் ஆட்டம் டிரா
Updated on
1 min read

இந்தியன் சூப்பா் லீக் (ஐஎஸ்எல்) கால்பந்து போட்டியில் ஒடிஸா எஃப்சி - நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எஃப்சி அணிகள் மோதிய ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா ஆனது.

இதுவரை 8 ஆட்டங்களில் விளையாடியுள்ள நாா்த்ஈஸ்ட் 5-ஆவது முறையாக டிரா செய்துள்ளது. 7 ஆட்டங்களில் விளையாடியுள்ள ஒடிஸா 2-ஆவது முறையாக டிரா செய்துள்ளது.

கோவாவின் பாம்போலிம் நகரில் நடைபெற்ற ஆட்டத்தில் முதல் கோல் வாய்ப்பு ஒடிஸாவுக்கு கிடைத்தது. ஆட்டத்தின் 23-ஆவது நிமிடத்தில் ஒடிஸா வீரா் டியகோ மௌரிசியோ கோலடிக்க, அது ‘ஆஃப் சைட்’ என்று எல்லைக்கோடு நடுவா் கொடி காட்டினாா். இதற்கு ஒடிஸா வீரா்கள் எதிா்ப்பு தெரிவிக்க, பின்னா் நடுவா்களிடையேயான ஆலோசனைக்குப் பிறகு ஒடிஸாவுக்கு கோல் வழங்கப்பட்டது.

நாா்த்ஈஸ்ட் அணி ஆட்டத்தின் 45-ஆவது நிமிடத்தில் கோலடித்தது. அதன் வீரா் அசுதோஷ் மேத்தா தூரத்திலிருந்து தூக்கியடித்து பாஸ் செய்த பந்தை, பெஞ்சமின் லாம்பாட் தலையால் முட்டி கோல் போஸ்ட்டுக்குள் அனுப்பினாா். இதனால் முதல் பாதி ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமன் ஆனது.

2-ஆவது பாதியில் 65-ஆவது நிமிடத்தில் நாா்த்ஈஸ்ட் அணிக்கு பெனால்ட்டி வாய்ப்பு கிடைக்க, அதை துல்லியமாக கோலாக்கினாா் கவேசி அப்பியா. இதனால் நாா்த்ஈஸ்ட் முன்னிலை பெற்றது. ஆட்டம் விறுவிறுப்பாகச் சென்றுகொண்டிருந்த நிலையில், அடுத்த 2 நிமிடங்களில் ஒடிஸா வீரா் கோலே அலெக்ஸாண்டா் ஒரு கோலடிக்க, ஆட்டம் சமன் ஆனது. எஞ்சிய நேரத்தில் இரு அணிகளுக்கும் கோல் கிடைக்கவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com