டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

இங்கிலாந்து முன்னாள் வீரர் ஜான் எட்ரிச் காலமானார்

இங்கிலாந்து அணிக்காக 77 டெஸ்டுகள் விளையாடிய ஜான் எட்ரிச் காலமானார். அவருக்கு வயது 83.

News image
படம் - twitter.com/ECB_cricket
Updated On :25 டிசம்பர் 2020, 11:39 am

DIN

இங்கிலாந்து அணிக்காக 77 டெஸ்டுகள் விளையாடிய ஜான் எட்ரிச் காலமானார். அவருக்கு வயது 83.

1963 முதல் 1976 வரை இங்கிலாந்து அணிக்காக விளையாடிய எட்ரிச், இடது கை ஆட்டக்காரராக முத்திரை பதித்தவர். வயது மூப்பு காரணமாக வடக்கு ஸ்காட்லாந்தில் அவர் காலமாகியுள்ளார். 

77 டெஸ்டுகளில் 5138 ரன்கள் எடுத்துள்ளார். சராசரி - 43.54. 1970-71 ஆஷஸ் தொடரில் 2 சதங்களுடன் 648 ரன்கள் எடுத்து 2-0 என இங்கிலாந்து அணி வெற்றி பெறுவதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். டெஸ்டில் 12 சதங்களும் 24 அரை சதங்களும் எடுத்துள்ளார். 1965-ல் நியூசிலாந்துக்கு எதிராக அதிகபட்சமாக 310 ரன்கள் எடுத்தார். 

7 ஒருநாள் ஆட்டங்களில் விளையாடிய எட்ரிச், முதல் சர்வதேச ஒருநாள் ஆட்டத்தில் விளையாடி, முதல் பவுண்டரியை அடித்து, முதல் ஆட்ட நாயகன் விருதையும் பெற்றுள்ளார். அந்த ஆட்டத்தில் 82 ரன்கள் எடுத்தார்.

எட்ரிச்சின் மறைவுக்கு இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் இரங்கல் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.