தொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மே.இ. அணியினர் அற்புதமான பந்துவீச்சு: போராட்டத்துடன் 300 ரன்களைக் கடந்த இங்கிலாந்து அணி

இங்கிலாந்து அணி 96 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.

News image
Updated On :25 ஜூலை 2020, 11:28 am

DIN

மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிரான 3-வது டெஸ்டில் இங்கிலாந்து அணி மிகவும் சிரமப்பட்டு முதல் இன்னிங்ஸில் 300 ரன்களைக் கடந்துள்ளது.

இங்கிலாந்து - மேற்கிந்தியத் தீவுகள் அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் ஜூலை 24 அன்று தொடங்கியுள்ளது. இந்த டெஸ்டை டிரா செய்தால் விஸ்டன் கோப்பையை மேற்கிந்தியத் தீவுகள் அணி தக்கவைத்துக் கொள்ளும். இங்கிலாந்து வெற்றி பெற்றால் தொடரை 2-1 என வென்றுவிடும். அயர்லாந்துடனான ஒரு டெஸ்ட் தொடரைத் தவிர்த்துப் பார்த்தால் கடந்த 5 டெஸ்ட் தொடர்களில் ஒன்றில் மட்டும் தான் இங்கிலாந்து அணி வென்றுள்ளது. அதனால் அந்த அணிக்கு இந்த வெற்றி மிக முக்கியமானதாக உள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்டில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இதனால் 3 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1-0 என முன்னிலை பெற்றது மேற்கிந்தியத் தீவுகள் அணி. எனினும் 2-வது டெஸ்டை 113 ரன்கள் வித்தியாசத்தில் வென்றுள்ளது இங்கிலாந்து அணி. பேட்டிங், பந்துவீச்சு என இரண்டிலும் அசத்திய பென் ஸ்டோக்ஸ், ஆட்ட நாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார். இதனால் டெஸ்ட் தொடர் 1-1 சமனில் உள்ளது. 3-வது டெஸ்ட், மான்செஸ்டரில் நடைபெறுகிறது. 

டாஸ் வென்ற மே.இ. தீவுகள் அணி கேப்டன் ஹோல்டர், பந்துவீச்சைத் தேர்வு செய்தார். அல்ஸாரி ஜோசப்புக்குப் பதிலாக ரகீம் கார்ன்வெல் இடம்பெற்றுள்ளார். இங்கிலாந்து அணியில் ஆண்டர்சன், பிராட், ஆர்ச்சர், வோக்ஸ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். 

இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்து முதல் நாள் ஆட்டத்தின் முடிவில் 85.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 258 ரன்கள் எடுத்தது. போப் 91, பட்லர் 56 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

சதமடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட போப், 91 ரன்களில் கேப்ரியல் பந்துவீச்சில் போல்ட் ஆனார். விக்கெட்டுகள் அடுத்தடுத்து விழ ஆரம்பித்தன. வோக்ஸ், ரோச் பந்துவீச்சில் 1 ரன்னில் ஆட்டமிழந்தார். இது ரோச்சின் 200-வது டெஸ்ட் விக்கெட் ஆகும். நன்கு விளையாடி 67 ரன்கள் எடுத்த பட்லர், கேப்ரியல் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். ஆர்ச்சர் 3 ரன்கள் எடுத்து ரோச் பந்துவீச்சில் வீழ்ந்தார். 

இங்கிலாந்து அணி 96 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்துத் தடுமாறி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.