பொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்துமேற்கு ஆசிய நிலவரம் : குவைத் இளவரசருடன் பேசிய பிரதமர் மோடி!உலகின் மிகப் பெரிய இயற்கை எரிவாயு வயல் மீது இஸ்ரேல் தாக்குதல்! கத்தார் கண்டனம்!மேடைகளில் ஆபாசங்களையும் அவதூறுகளையும் பேசுகிறார்கள் - முதல்வர் மு.க. ஸ்டாலின்மார்ச் 23-ல் தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்தவெக குறித்து யார், என்ன அவதூறு பரப்பினாலும் நம்ப வேண்டாம் - விஜய்மதச்சார்பற்ற கொள்கையில் சமரசமில்லை, தவெக தலைமையில் ஆட்சி! - விஜய்
/

இயல்பு நிலைக்குத் திரும்பும் கிரிக்கெட் உலகம்: இந்தியா - ஆஸ்திரேலியா தொடர் அட்டவணை அதிகாரபூர்வமாக வெளியீடு

இந்திய அணியின் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்துக்கான அட்டவணையை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

News image
Updated On :29 மே 2020, 6:43 am

DIN

இந்திய அணியின் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணத்துக்கான அட்டவணையை அதிகாரபூர்வமாக வெளியிட்டுள்ளது கிரிக்கெட் ஆஸ்திரேலியா.

2020-21 சீஸனுக்காக அட்டவணையை கிரிக்கெட் ஆஸ்திரேலியா வெளியிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதம் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 3 ஒருநாள் ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலிய அணி பங்கேற்கிறது. ஆகஸ்ட் 9 முதல் ஆகஸ்ட் 15 வரை இத்தொடர் நடைபெறுகிறது.

அக்டோபர் 4-9 வரை மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு எதிராக 3 ஆட்டங்கள் டி20 தொடர் நடைபெறுகிறது. நவம்பரில் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக ஒரு டெஸ்ட் ஆட்டமும் ஜனவரியில் நியூசிலாந்துக்கு எதிராக ஒருநாள், டி20 தொடர்கள் நடைபெறுகின்றன. இந்த அட்டவணையில் அக்டோபர் 18 முதல் நவம்பர் 15 வரையிலான டி20 உலகக் கோப்பையும் இடம்பெற்றுள்ளது.

இந்திய அணி டி20 உலகக் கோப்பைப் போட்டிக்கு முன்பு ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான 3 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கிறது. டிசம்பர் 3 முதல் ஜனவரி 7 வரை இரு அணிகளுக்கு இடையிலான 4 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. அதன்பின்னர் ஜனவரி மாதம்  3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் பங்கேற்கின்றன.

கரோனா அச்சுறுத்தல் காரணமாக இந்த அட்டவணைகள் மாறுதலுக்கு உட்பட்டவை என கிரிக்கெட் ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.

இந்திய அணியின் ஆஸ்திரேலியச் சுற்றுப்பயணம்

டி20 தொடர்

முதல் டி20: அக்டோபர் 11, பிரிஸ்பேன்

Second T20: அக்டோபர் 14, கான்பெர்ரா

Third T20: அக்டோபர் 17, அடிலெய்ட்

டெஸ்ட் தொடர்

முதல் டெஸ்ட்: டிசம்பர் 3-7, பிரிஸ்பேன்

2-வது டெஸ்ட்: டிசம்பர் 11-15, அடிலெய்ட் (பகலிரவு)

3-வது டெஸ்ட்: டிசம்பர் 26-30, மெல்போர்ன்

4-வது டெஸ்ட்: ஜனவரி 3-7, சிட்னி

ஒருநாள் தொடர்

முதல் ஒருநாள்: ஜனவரி 12, பெர்த்

2-வது ஒருநாள்: ஜனவரி 15, மெல்போர்ன்

3-வது ஒருநாள்: ஜனவரி 17, சிட்னி

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.