மகளிர் டி20 சேலஞ்ச்: டிரையல் பிளேஸர்ஸ் முதன்முறையாக சாம்பியன்!

​மகளிர் டி20 சேலஞ்சில் சூப்பர் நோவாஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டிரையல் பிளேஸர்ஸ் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மகளிர் டி20 சேலஞ்சில் சூப்பர் நோவாஸ் அணியை 16 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய டிரையல் பிளேஸர்ஸ் முதன்முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

மகளிர் டி20 சேலஞ்ச் இறுதி ஆட்டத்தில் டிரையல் பிளேஸர்ஸ், சூப்பர் நோவாஸ் அணிகள் இன்று (திங்கள்கிழமை) மோதின. இதில் டாஸ் வென்ற சூப்பர் நோவாஸ் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது.

இதன்படி முதலில் பேட் செய்த டிரையல் பிளேஸர்ஸ் கேப்டன் ஸ்மிருதி மந்தானாவின் அதிரடி ஆட்டத்தால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 118 ரன்கள் சேர்த்தது. ஒரு கட்டத்தில் பெரிய ஸ்கோரை எட்ட வேண்டிய நிலையிலிருந்த டிரையல் பிளேஸர்ஸ் ராதா யாதவின் சுழலில் அடுத்தடுத்த விக்கெட்டுகளை இழந்தது. ராதா யாதவ் 16 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

119 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் சூப்பர் நோவாஸ் அணி இன்னிங்ஸைத் தொடங்கியது. அந்த அணி தொடக்கம் முதலே சீரான இடைவெளியில் விக்கெட்டை இழந்து விளையாடியது. இதனால், வெற்றிக்குத் தேவையான ரன் ரேட் 7-க்கு கூடுதலாகவே இருந்தது. பெரிய பாட்னர்ஷிப் அமையாதது சூப்பர் நோவாஸுக்குப் பெரிய பின்னடைவாக அமைந்தது.

அந்த அணியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கௌர் அதிகபட்சமாக 36 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார். அந்த அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 102 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதன்மூலம், டிரையல் பிளேஸர்ஸ் அணி 16 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதன்முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com