பிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஐபிஎல் போட்டியிலிருந்து ஹர்பஜன் சிங் விலகல்: அதிகாரபூர்வ அறிவிப்பு

இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விலகியுள்ளார். 

News image
Updated On :4 செப்டம்பர் 2020, 11:35 am

DIN

இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து சிஎஸ்கே சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் விலகியுள்ளார். 

கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு இந்தியாவில் நடைபெறவிருந்த ஐபிஎல் போட்டி தள்ளிவைக்கப்பட்டது. ஐக்கிய அரபு அமீரகத்தில் வரும் செப்டம்பா் 19-ம் தேதி தொடங்கும் ஐபிஎல் போட்டி, நவம்பா் 10-ம் தேதி முடிவடைகிறது. துபை, அபுதாபி, ஷாா்ஜாவில் உள்ள மைதானங்களில் ஆட்டங்கள் நடைபெறுகின்றன.

கடந்த வாரம், இரண்டு வீரர்கள் உள்பட சிஎஸ்கேவைச் சேர்ந்த 13 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. தற்போது எடுக்கப்பட்ட மூன்று பரிசோதனைகளில் எந்தவொரு சிஎஸ்கே வீரருக்கும் கரோனா இல்லை என்பது உறுதியாகியுள்ளது. இதனால் இன்று முதல் அனைவரும் பயிற்சியில் பங்கேற்கிறார்கள். 

சிபிஎல், சர்வதேச போட்டிகளில் பங்கேற்கும் சில வீரர்கள் தவிர அனைத்து சிஎஸ்கே வீரர்களும் ஐக்கிய அரபு அமீரகத்துக்கு வந்துள்ளார்கள். எனினும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் மட்டும் இந்தியாவிலிருந்து இன்னும் புறப்படாமல் இருந்தார். ஹர்பஜன் சிங்கின் தாயாருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது இதற்குக் காரணமாகச் சொல்லப்பட்டது. 

இந்நிலையில் இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து ஹர்பஜன் சிங் விலகியுள்ளார். இதுபற்றி ட்விட்டரில் அவர் கூறியதாவது:

அருமை நண்பர்களே, தனிப்பட்ட காரணங்களால் இந்த வருட ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளேன். இது கடினமான நேரம். சிஎஸ்கே நிர்வாகம் மிகுந்த ஒத்துழைப்பை அளித்துள்ளது. அவர்களுக்குச் சிறந்த ஐபிஎல் போட்டி அமையவேண்டும். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் என்று கூறியுள்ளார். 

சுரேஷ் ரெய்னாவுக்கு அடுத்ததாக ஹர்பஜன் சிங்கும் விலகியுள்ளதால் சிஎஸ்கே அணியில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.