/

ஐபிஎல் அட்டவணை வெளியீடு: முதல் ஆட்டத்தில் மும்பை - சென்னை மோதல்

​நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 19-ம் தேதி அபுதாபியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

News image
Updated On :6 செப்டம்பர் 2020, 11:20 am

DIN


நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 19-ம் தேதி அபுதாபியில் தொடங்கும் முதல் ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் மும்பை இந்தியன்ஸ் - சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பாண்டு ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கரோனா அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறுகிறது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது ஐக்கிய அரபு அமீரகம் சென்று பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்த நிலையில், போட்டி அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. ஏற்கெனவே அறிவித்தபடி, முதல் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் மோதுகின்றன. அபுதாபியில் நடைபெறும் இந்த ஆட்டம் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.