பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியலில் நடராஜனுக்கு இடமில்லை!

பிசிசிஐ வெளியிடப்பட்டுள்ள புதிய ஒப்பந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் இடம்பெறவில்லை.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 11:53 am

DIN

பிசிசிஐ வெளியிடப்பட்டுள்ள புதிய ஒப்பந்தப் பட்டியலில் தமிழகத்தைச் சேர்ந்த நடராஜன் இடம்பெறவில்லை.

அக்டோபர் 2020 முதல் செப்டம்பர் 2021 வரையிலான பிசிசிஐ ஒப்பந்தப் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கிரேடு ஏ+, கிரேடு ஏ, கிரேட் பி, கிரேட் சி ஆகிய பிரிவுகளில் வீரர்களுக்கு ஒப்பந்தம் அளிக்கப்பட்டுள்ளது. கிரேட் ஏ+ பிரிவில் விராட் கோலி, ரோஹித் சர்மா, பும்ரா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். இவர்களின் சம்பளம் தலா ரூ. 7 கோடி. ரூ. 5 கோடிக்கான கிரேட் ஏ பிரிவில் அஸ்வின், ஜடேஜா, புஜாரா, ரஹானே, தவன், கே.எல். ராகுல், ஷமி, இஷாந்த் சர்மா, ரிஷப் பந்த், பாண்டியா ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

ரூ. 3 கோடிக்கான கிரேட் பி பிரிவில் சஹா, உமேஷ் யாதவ், புவனேஸ்வர் குமார், ஷர்துல் தாக்குர், மயங்க் அகர்வால் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள். ரூ. 1 கோடிக்கான கிரேட் சி பிரிவில் குல்தீப் யாதவ், சைனி, தீபக் சஹார், ஷுப்மன் கில், விஹாரி, அக்‌ஷர் படேல், ஷ்ரேயஸ் ஐயர், வாஷிங்டன் சுந்தர், சஹால், சிராஜ் ஆகியோர் இடம்பெற்றுள்ளார்கள்.

குறைந்த ஆட்டங்களில் விளையாடியுள்ள சைனி, தீபக் சஹார், ஷுப்மன் கில், சிராஜ் ஆகியோர் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ள நிலையில் தமிழக வீரர் நடராஜனுக்கு ஒப்பந்தப் பட்டியலில் இடம் கிடைக்கவில்லை. நடராஜன் இந்திய அணிக்காக 1 டெஸ்ட், 2 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் விளையாடியுள்ளார். இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக விளங்கும் நடராஜனுக்கு ஒப்பந்தம் வழங்காதது அவருடைய ரசிகர்களை ஆச்சர்யப்பட வைத்துள்ளது. எனினும் பிசிசிஐ விதிமுறைகளின்படி குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆட்டங்களில் விளையாடியவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த வருடம் அதனைப் பூர்த்தி செய்தி ஒப்பந்தப் பட்டியலில் நடராஜன் இடம்பெறுவார் என எதிர்பார்க்கலாம். கடந்த வருட ஒப்பந்தப் பட்டியலில் இடம்பிடித்த மனிஷ் பாண்டே, கெதர் ஜாதவுக்கு ஆகியோருக்கு மீண்டும் ஒப்பந்தம் அளிக்கப்படவில்லை. 

ஷுப்மன் கில், அக்‌ஷர் படேல், சிராஜ் ஆகியோர் புதிதாக ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளார்கள். சைனி 2 டெஸ்ட், 7 ஒருநாள், 10 டி20 ஆட்டங்களிலும் தீபக் சஹார் 3 ஒருநாள், 13 டி20 ஆட்டங்களிலும் ஷுப்மன் கில் 7 டெஸ்டுகள், 3 ஒருநாள் ஆட்டங்களிலும் சிராஜ் 5 டெஸ்டுகள், 1 ஒருநாள், 3 டி20 ஆட்டங்களிலும் விளையாடியுள்ளார்கள்.  

சமீபத்தில் இந்திய அணியில் விளையாடிய சூர்யகுமார் யாதவ், இஷான் கிஷன், ராகுல் சஹார் ஆகியோரும் ஒப்பந்தப் பட்டியலில் இடம்பெறவில்லை. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.