ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

துபே, திவாதியா அதிரடி: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு 178 ரன்கள் இலக்கு

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்கள் குவித்தது. 

News image
Updated On :22 ஏப்ரல் 2021, 3:58 pm

DIN

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 177 ரன்கள் குவித்தது. 

14-வது ஐபிஎல் சீசனின் 16-வது ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் இன்று மோதுகின்றன. மும்பையில் நடைபெற்று வரும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் கேப்டன் கோலி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதையடுத்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக பட்லர், வோரா ஆகியோர் களமிறங்கினர். 

ஆனால் இருவரும் வந்த வேகத்திலேயே பெவிலியன் திரும்பினர். பட்லர் 8 ரன்களிலும், வோரா 7 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் சஞ்சு சாம்சனும் நிலைத்து ஆடவில்லை. அவர் 21 ரன்களில் வெளியேறினார். இதன் பின்னர் வந்த துபே சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 32 பந்துகளுக்கு 46 ரன்கள் எடுத்து ராஜஸ்தான் அணியின் ரன் ரேட் உயர உதவினார். 

தொடர்ந்து களமிறங்கிய ஆல் ரவுண்டர் ராகுல் திவாதியா அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அவர் 23 பந்துகளில் 40 ரன்கள் எடுத்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இறுதியில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் 177 ரன்கள் குவித்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.