ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பேட்டிங், பவுலிங்கில் அசத்திய ஜடேஜா: சென்னை அணிக்கு தொடர்ந்து 4ஆவது வெற்றி

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

News image
Updated On :25 ஏப்ரல் 2021, 1:56 pm

DIN

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

14-வது ஐபிஎல் சீசனின் 19-வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் தோனி முதலில் பேட்டிங் தேர்வு செய்தார். தொடக்க வீரர்களாக களமிறங்கிய ருத்துராஜ், டூ பிளெஸ்ஸிஸ் நிதானமாக விளையாடினர். இந்நிலையில், ருத்துராஜ் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரெய்னா, டூ பிளெஸ்ஸிஸும் ஜோடி சேர்ந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

இந்நிலையில், ஹர்சல் படேல் வீசிய 14வது ஓவரில் ரெய்னா 24, டூ பிளெஸ்ஸிஸ் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள். பின் களமிறங்கிய ராயுடு தொடக்கம் முதலே அதிரடியாக ஆடினாலும் 14 ரன்களில் அவுட்டானார். இறுதி கட்டத்தில் அதிரடி காட்டிய ஜடேஜா, ஹர்சல் விசிய கடைசி ஓவரில் மட்டும் 5 சிக்ஸர்கள், ஒரு பவுண்டரி அடிக்க 20வது ஓவரில் 37 ரன்கள் குவித்தார். 

இதன்மூலம் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 191 ரன்கள் சென்னை அணி குவித்தது. கடைசி வரை களத்தில் இருந்த ஜடேஜா 5 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளுடன் 28 பந்துகளுக்கு 68 ரன்கள் குவித்தார். பெங்களூர் அணியின் ஹர்சல் படேல் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 192 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய பெங்களூரு அணியில் படிக்கல், மேக்ஸ்வெல்லை தவிர யாரும் சிறப்பாக விளையாடவில்லை. 

இதனால் அந்த அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்புக்கு 122 மட்டுமே எடுத்தது. இதன்மூலம் சென்னை அணி 69 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புள்ளி பட்டியலிலும் முதலிடம் பிடித்தது. பெங்களூரு அணியில் படிக்கல் 34, மேக்ஸ்வெல் 22 ரன்கள் எடுத்தனர். சென்னை அணியில் சிறப்பாக பந்துவீசிய ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.