ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

ப்ரித்வி ஷா அதிரடி: சன்ரைஸா்ஸ் ஹைதராபாத்துக்கு 160 ரன்கள் இலக்கு

சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல்லி பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுத்தது.

News image
Updated On :25 ஏப்ரல் 2021, 3:49 pm

DIN

சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதல்லி பேட்டிங் செய்த டெல்லி கேப்பிட்டல்ஸ் 20 ஓவர்கள் முடிவில் 159 ரன்கள் எடுத்தது.

ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 20-ஆவது லீக் ஆட்டத்தில், டெல்லி கேப்பிட்டல்ஸ்-சன்ரைஸா்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பந்த் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்.

இதையடுத்து டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக ப்ரித்வி ஷா, ஷிகர் தவான் ஆகியோர் களமிறங்கினர். துவக்கம் முதலே அதிரடி ஆட்டத்தை வெடிப்படுத்திய ப்ரித்வி ஷா அரை சதம் கடந்தார். ஆனால் மற்றொரு துவக்க ஆட்டக்காரரான ஷிகர் தவான் 26 பந்துகளில் 28 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இவரைத் தொடர்ந்து அரை சதம் கடந்த ப்ரித்வி ஷா 39 பந்துகளில் 53 ரன்களுக்கு தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் பின்னர் களமிறங்கிய கேப்டன் ரிஷப் பந்த், ஸ்டீவ் சுமித்தும் தன் பங்கிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனால் ரிஷப் பந்த் 27 பந்துகளில் 37 ரன்கள் எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார்.

ஸ்டீவ் சுமித் இறுதி வரை ஆட்டமிழக்காமல் 25 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் டெல்லி அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.