ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

சதத்தை நெருங்கும் ரூட்: இங்கிலாந்து 140 ரன்கள் முன்னிலை

இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 4-வது நாள் தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 140 ரன்கள் முன்னிலைப் பெற்று விளையாடி வருகிறது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 3:12 pm

DIN


இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் 4-வது நாள் தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து அணி இரண்டாவது இன்னிங்ஸில் 140 ரன்கள் முன்னிலைப் பெற்று விளையாடி வருகிறது.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் டிரென்ட் பிரிட்ஜில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 183 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.

தொடர்ந்து, முதல் இன்னிங்ஸை ஆடிய இந்தியா 278 ரன்கள் எடுத்தது.

95 ரன்கள் பின்தங்கிய நிலையில் இரண்டாவது இன்னிங்ஸை ஆடத் தொடங்கிய இங்கிலாந்து 4-வது நாள் உணவு இடைவேளையில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து 24 ரன்கள் முன்னிலைப் பெற்றிருந்தது. 

ரூட் 54 ரன்களுடனும், சிப்லே 27 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

உணவு இடைவேளை முடிந்து ஆட்டம் தொடங்கிய சிறிது நேரத்திலேயே சிப்லே 28 ரன்களுக்கு ஜாஸ்பிரீத் பூம்ரா வேகத்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ஜானி பேர்ஸ்டோவ் துரிதமாக விளையாடி 30 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய டேன் லாரன்ஸும் துரிதமான ஆட்டத்தையே வெளிப்படுத்தினார். அவர் 25 ரன்களுக்கு விக்கெட்டை இழந்தார்.

இதன்பிறகு, ஜோ ரூட்டுடன் ஜாஸ் பட்லர் இணைந்தார். இவரும் சற்று துரிதமான ஆட்டத்தையே வெளிப்படுத்தி வருகிறார்.

இதனால், அந்த அணியின் முன்னிலை 100-ஐத் தாண்டியுள்ளது.

4-வது நாள் தேநீர் இடைவேளையில் இங்கிலாந்து 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 235 ரன்கள் எடுத்துள்ளது.

ரூட் 96 ரன்களுடனும், பட்லர் 15 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.