இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் மொயீன் அலி சேர்ப்பு
இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் மொயீன் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.


இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணியில் ஆல்ரவுண்டர் மொயீன் அலி சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் டிராவில் முடிவடைந்தது. 2-வது டெஸ்ட் லார்ட்ஸ் மைதானத்தில் வியாழன் முதல் தொடங்குகிறது.
முதல் டெஸ்டில் இங்கிலாந்தின் பேட்டிங் விமர்சனத்துக்கு ஆளானதால் ஆல்ரவுண்டர் மொயீன் அலி புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளார். ஐந்து டெஸ்ட் சதங்கள் அடித்துள்ள மொயீன் அலி, இங்கிலாந்து அணியின் பேட்டிங் வரிசைக்குப் புதிய பலம் சேர்ப்பார், ஆல்ரவுண்டர்களான பென் ஸ்டோக்ஸ், கிறிஸ் வோக்ஸ் இல்லாத குறையைத் தீர்த்து வைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த 23 மாதங்களில் ஒரு முதல்தர ஆட்டங்களில் மட்டுமே மொயீன் அலி விளையாடியுள்ளார். எனினும் வெள்ளைப் பந்து கிரிக்கெட் ஆட்டங்களில் சிறப்பாக விளையாடி வருகிறார். கடந்த பிப்ரவரி மாதம் சென்னையில் இந்தியாவுக்கு எதிரான 2-வது டெஸ்டில் மொயீன் அலி விளையாடினார். அந்த ஆட்டத்தில் எட்டு விக்கெட்டுகளை வீழ்த்தினார். 2019 ஆஷஸ் தொடருக்குப் பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் ஆட்டத்தில் விளையாடவுள்ளார் மொயீன் அலி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...