அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

டி20 உலகக்கோப்பை அட்டவணை வெளியீடு: அக். 24-இல் இந்தியா-பாகிஸ்தான் மோதல்

டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணையை செவ்வாய்க்கிழமை காலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது.

News image
Updated On :17 ஆகஸ்ட் 2021, 5:50 am

DIN

டி20 உலகக் கோப்பை போட்டிகளுக்கான அட்டவணையை செவ்வாய்க்கிழமை காலை சர்வதேச கிரிக்கெட் வாரியம் வெளியிட்டது.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபு தாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில், டி20 உலகக்கோப்பை போட்டிக்கான அட்டவணையை ஐசிசி இன்று வெளியிட்டுள்ளது. சூப்பர் 12 சுற்றில் குரூப் 1 மற்றும் குரூப் 2 என இரண்டு குழுக்களாக பிரிந்து மொத்தம் 12 அணிகள் விளையாடவுள்ளன.

Story image

இதில், குரூப் 1இல் ஆஸ்திரேலியா, தென் ஆப்ரிக்கா, இங்கிலாந்து, மேற்கு இந்தியா உள்ளிட்ட அணிகளும், குரூப் 2இல் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூஸிலாந்து உள்ளிட்ட அணிகளும் மோதவுள்ளன.

Story image

முதல் அரையிறுதி அபுதாபியில் நவம்பர் 10ஆம் தேதியும், இரண்டாம் அரையிறுதி துபையில் நவம்பர் 11ஆம் தேதியும், இறுதிப் போட்டி துபையில் நவம்பர் 14ஆம் தேதியும் நடைபெறவுள்ளன.

மேலும் சூப்பர் 12 சுற்றில், இந்திய அணி அக். 24இல் பாகிஸ்தான், அக்.31இல் நியூஸிலாந்து, நவ.3இல் ஆப்கானிஸ்தான் மற்றும் நவ.5இல் தகுதிச் சுற்றில் தகுதி பெறும் அணியுடன் மோதவுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.