டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: மாரியப்பன் தங்கவேலு எப்போது போட்டியிடுகிறார்?

டோக்கியோ பாராலிம்பிக்ஸில் ஆடவர் உயரம் தாண்டுதல் (டி63) போட்டி...
டோக்கியோ பாராலிம்பிக்ஸ்: மாரியப்பன் தங்கவேலு எப்போது போட்டியிடுகிறார்?

மாற்றுத்திறனாளிகள் தங்கள் திறமையை வெளிப்படுத்த உதவும் பாராலிம்பிக் போட்டி 2020 டோக்கியோவில் இன்று தொடங்கி செப். 5-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் மொத்தம் 4,500 வீரா், வீராங்கனைகள் கலந்து கொள்கின்றனா். இந்தியாவில் இருந்து 54 போ் கொண்ட அணி பங்கேற்கிறது. உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள் முடிந்தவுடன் பாராலிம்பிக் போட்டி நடத்தப்படும். 

தமிழக வீரா் மாரியப்பன் தங்கவேலு, தொடக்க விழா அணிவகுப்பில் தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பை பெற்றார். ஆனால் விமானப் பயணத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவருடன் தொடர்பில் இருந்ததால் மாரியப்பன் தங்கவேலு உள்பட இந்திய அணியைச் சேர்ந்த 5 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்கள். இதனால்  தேசியக் கொடியை ஏந்திச் செல்லும் வாய்ப்பை டேக் சந்த் பெற்றுள்ளார். பரிசோதனையில் மாரியப்பன் தங்கவேலுக்கு கரோனா இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால் அவர் போட்டியில் பங்கேற்பதில் சிக்கல் எதுவும் இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 

கடந்த 2016 ரியோ பாராலிம்பிக் போட்டியில் உயரம் தாண்டுதலில் (டி 63) தமிழகத்தின் மாரியப்பன் தங்கவேலு தங்கப் பதக்கம் வென்றார். 

இந்நிலையில் டோக்கியோ பாராலிம்பிக்ஸில் ஆடவர் உயரம் தாண்டுதல் (டி63) போட்டி, ஆகஸ்ட் 31 அன்று இந்திய நேரம் மாலை 3.55 மணிக்கு நடைபெறுகிறது. 

பாராலிம்பிக் போட்டி இந்தியாவில் தூர்தர்ஷன், டிடி ஸ்போர்ட்ஸ், யூரோஸ்போர்ட் தொலைக்காட்சிகளில் நேரலையாக ஒளிபரப்பாகிறது. அதேபோல பிரச்சார் பாரதி ஸ்போர்ட்ஸ் (Prasar Bharati Sports) யூடியூப் சேனலிலும் நேரலையாகக் காணலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com