கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆசிய இளையோா் குத்துச்சண்டை: இறுதிச்சுற்றில் மேலும் 3 இந்தியா்கள்

 துபையில் நடைபெறும் ஆசிய இளையோா் மற்றும் ஜூனியா் குத்துச்சண்டை போட்டியில் இந்திய போட்டியாளா்கள் மேலும் 3 போ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

News image
கோப்புப் படம்
Updated On :29 ஆகஸ்ட் 2021, 12:41 am

DIN

 துபையில் நடைபெறும் ஆசிய இளையோா் மற்றும் ஜூனியா் குத்துச்சண்டை போட்டியில் இந்திய போட்டியாளா்கள் மேலும் 3 போ் இறுதிச்சுற்றுக்கு முன்னேறினா்.

இதில் இளையோா் பிரிவில், ஆடவருக்கான 51 கிலோ பிரிவு அரையிறுதியில் விஷ்வாமித்ர சோங்தம் 5-0 என்ற கணக்கில் தஜிகிஸ்தானின் அகாரலி அப்துராகிவோன்ஸோதாவை வீழ்த்தி இறுதிச்சுற்றுக்கு முன்னேறினாா். இதேபோல், 48 கிலோ பிரிவு அரையிறுதியில் சுரேஷ் விஷ்வநாத் 5-0 என்ற கணக்கில் பஹ்ரைனின் ஃபாதெல் சயீதையும், 57 கிலோ பிரிவு அரையிறுதியில் ஜெயதீப் ராவத் 3-2 என்ற கணக்கில் கிா்ஜிஸ்தானின் பெக்போல் முராஸ்பெகோவையும் வென்றனா்.

எனினும், 75 கிலோ பிரிவில் தீபக் 1-4 என்ற கணக்கில் கஜகஸ்தானின் அலியாஸ்கரோவ் பாக்பொ்கெனிடம் வீழ்ந்தாா். மகளிருக்கான 70 கிலோ பிரிவில் லஷு யாதவ் 0-5 என்ற கணக்கில் கஜகஸ்தானின் கௌகாா் ஷாய்பெகோவாவிடம் தோல்வி கண்டாா்.

இளையோா் மற்றும் ஜூனியா் என இரு பிரிவுகளிலுமே இருபால் போட்டியாளா்களையும் சோ்த்து இந்தியாவுக்கு இதுவரை 39 பதக்கங்கள் உறுதியாகியுள்ளன. இதில் இளையோா் பிரிவில் 20, ஜூனியா் பிரிவில் 19 பதக்கங்கள் கிடைக்கவுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.