ஐபிஎல் போட்டியில் இரு புதிய அணிகள்: பிசிசிஐ அறிவிப்பு
ஐபிஎல் போட்டியில் இரு புதிய அணிகளைச் சேர்க்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.


ஐபிஎல் போட்டியில் இரு புதிய அணிகளைச் சேர்க்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.
2008 முதல் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது 8 அணிகள் போட்டியிடுகின்றன. இந்நிலையில் ஐபிஎல் போட்டியில் மேலும் புதிதாக இரு அணிகளைச் சேர்க்க முடிவு செய்துள்ள பிசிசிஐ அதற்கான அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளது. புதிய ஐபிஎல் அணிக்கான ஏல விண்ணப்பத்தை அக்டோபர் 5 வரை பெற்றுக்கொள்ளலாம். விதிமுறைகளுக்கு ஏற்ப தகுதியுள்ள நிறுவனங்களால் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும் என பிசிசிஐ அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதையடுத்து 2022 முதல் ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் போட்டியிடவுள்ளன. இதனால் பிசிசிஐக்குக் கூடுதாக ரூ. 5000 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தைக் கொண்டிருப்பதால் எப்படியும் ஆமதாபாத் நகரின் பெயரில் ஓர் அணி உருவாகும் என அறியப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...