தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

பாராலிம்பிக்ஸ்: வெண்கலம் வென்ற இந்திய வீரர் சிங்ராஜ் அதானா

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் சிங்ராஜ் அதானா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 

News image
Updated On :31 ஆகஸ்ட் 2021, 9:32 am

DIN

டோக்கியோ பாராலிம்பிக்ஸ் துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்தியாவின் சிங்ராஜ் அதானா வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். 

ஆடவர் 10 மீ. ஏர் பிஸ்டல் பி1 பிரிவில் இன்று போட்டியிட்ட இந்தியாவின் சிங்ராஜ் அதானா, 216.8 புள்ளிகளுடன் மூன்றாம் இடம் பிடித்து வெண்கலப் பதக்கத்தை வென்றார். இது, டோக்கியோ பாராலிம்பிக்ஸில் இந்திய அணி பெற்றுள்ள 8-வது பதக்கமாகும். இப்போட்டியின் தகுதிச்சுற்றில் இந்தியாவின் மனிஷ் நர்வால் முதலிடம் பிடித்தாலும் இறுதிச்சுற்றில் அவர் தோல்வியடைந்தார். 

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த 39 வயது சிங்ராஜ், தான் பங்கேற்ற முதல் பாராலிம்பிக்ஸ் போட்டியிலேயே பதக்கம் வென்றுள்ளார்.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.