சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து!இந்திய பங்குச் சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,600 புள்ளிகள் சரிவு!ஹோர்முஸ் நீரிணை இன்றே முற்றுகை! டிரம்ப் அறிவிப்பு கச்சா எண்ணெய் விலை 7% உயர்வு! மீண்டும் 100 டாலரைத் தாண்டியது! கடிதத்தைப் பொதுவில் வெளியிடத் தயாரா? நிர்மலா சீதாராமனுக்கு ஸ்டாலின் சவால்!
/

துரதிருஷ்டவசமான முறையில் ஆட்டமிழந்த புஜாரா!

​இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் சேத்தேஷ்வர் புஜாரா துரதிருஷ்டவசமான முறையில் ஆட்டமிழந்தார்.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 10:32 am


இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் சேத்தேஷ்வர் புஜாரா துரதிருஷ்டவசமான முறையில் ஆட்டமிழந்தார்.

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கிடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட் செய்த இங்கிலாந்து 578 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து திணறியது.

ரோஹித் சர்மா 6 ரன்களுக்கும், ஷுப்மன் கில் 29 ரன்களுக்கும், விராட் கோலி 11 ரன்களுக்கும், அஜின்க்யா ரஹானே 1 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். இதனால், இந்திய அணி 73 ரன்களுக்குள் 4 விக்கெட்டுகளை இழந்தது.

இதையடுத்து, புஜாரா மற்றும் ரிஷப் பந்த் பாட்னர்ஷிப் அமைத்தனர். புஜாரா தனது பாணியில் நிதானம் காட்ட, பந்த் டி20 பாணியில் சிக்ஸர்களாகப் பறக்கவிட்டு அதிரடி காட்டினார்.

Story image

புஜாரா 106-வது பந்திலும், பந்த் 40-வது பந்திலும் அரைசதத்தை எட்டினர்.

Story image

இந்த பாட்னர்ஷிப் 5-வது விக்கெட்டுக்கு 100 ரன்களைக் கடந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது.

Story image

புஜாரா 73 ரன்கள் எடுத்திருந்த நிலையில் டோம் பெஸ் பந்தை தூக்கி அடிக்க முயற்சித்தார். ஆனால், அருகிலிருந்த பீல்டரின் தோள்பட்டையில் பட்ட பந்து அடுத்த பீல்டரின் கைக்கு நேரடியாக சென்றது. இதன்மூலம் அது எளிதான கேட்ச் ஆனது.

பெரிய பாட்னர்ஷிப்பாக மாற வேண்டிய தருணத்தில் புஜாரா ஆட்டமிழந்தது இந்திய அணிக்கு மிகப் பெரிய பின்னடைவாக அமைந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.