/

ஜடேஜாவுக்கு எலும்பு முறிவு: 4-வது டெஸ்டில் விளையாடுவதில் சிக்கல்

இந்திய அணியின் ஆல்-ரௌண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :9 ஜனவரி 2021, 12:24 pm

DIN


இந்திய அணியின் ஆல்-ரௌண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்குப் பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

ஆஸ்திரேலியா, இந்தியா அணிகளுக்கிடையிலான 3-வது டெஸ்ட் ஆட்டம் சிட்னியில் நடைபெற்று வருகிறது. இந்த ஆட்டத்தில் இந்திய அணியின் முதல் இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது விக்கெட் கீப்பர் ரிஷப் பந்த் மற்றும் ரவீந்திர ஜடேஜாவுக்குக் காயம் ஏற்பட்டது. காயம் ஏற்பட்டபோதிலும் இருவரும் தொடர்ந்து பேட்டிங் செய்தனர்.

Story image

ஆனால், ஆஸ்திரேலியாவின் 2-வது இன்னிங்ஸ் பேட்டிங்கின்போது இருவருமே பீல்டிங் செய்யவில்லை. இருவரும் ஸ்கேன் பரிசோதனைக்காக மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்டனர். 

இதனால், பந்த்-க்கு பதில் ரித்திமான் சாஹா கீப்பிங் செய்தார். ஜடேஜாவுக்குப் பதில் மயங்க் அகர்வால் பீல்டிங் செய்தார்.

இந்த நிலையில் ஸ்கேன் பரிசோதனையில் ஜடேஜாவுக்குப் பெருவிரலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதாக பிசிசிஐ வட்டாரங்கள் மூலம் தகவல் வெளியாகியுள்ளது.

Story image

அதேசமயம் ரிஷப் பந்த்-க்கு பெரிதளவில் காயம் இல்லை எனவும் 2-வது இன்னிங்ஸில் அவர் பேட் செய்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இதுபற்றி பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பிசிசிஐ வட்டாரங்கள் தெரிவித்தது:

"ரவீந்திர ஜடேஜாவுக்குப் பெருவிரல் இடப்பெயர்வு மற்றும் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. அவருக்கு பேட்டிங் செய்வது கடினம். 2 முதல் 3 வாரங்களுக்கு அவரால் மீண்டும் களமிறங்க முடியாது. எனவே, கடைசி டெஸ்டில் அவர் விளையாட முடியாது. 

பந்த்-க்கு அச்சுறுத்தும் வகையில் காயமில்லை. அவரால் பேட்டிங் செய்ய முடியும்."

சிட்னி டெஸ்ட் ஆட்டத்துக்கு முன்பாக இஷாந்த் சர்மா, முகமது ஷமி, உமேஷ் யாதவ் மற்றும் கேஎல் ராகுல் ஆகியோர் ஏற்கெனவே காயம் காரணமாக விலகினர். இந்தியக் கேப்டன் விராட் கோலி முதல் டெஸ்ட் ஆட்டத்துக்குப் பிறகு இந்தியா திரும்பினார். இந்த வரிசையில் தற்போது ரவீந்திர ஜடேஜாவையும் இந்திய அணி இழக்கவுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.