தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை 3 டிகிரி செல்சியஸ் வரை குறையக்கூடும்தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

தில்லி கேபிடல்ஸ் கேப்டன் பதவி மீண்டும் கிடைக்குமா?: ஷ்ரேயஸ் ஐயர் பதில்

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் நான் விளையாடுவேன்.

News image
Updated On :6 ஜூலை 2021, 5:29 am

DIN

தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் பதவி குறித்து அணியின் உரிமையாளர்கள் முடிவெடுப்பார்கள் என ஷ்ரேயஸ் ஐயர் கூறியுள்ளார். 

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் இந்திய வீரர் ஷ்ரேயஸ் ஐயர் ஃபீல்டிங் செய்தபோது அவருடைய இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இங்கிலாந்துக்கு எதிரான மீதமுள்ள இரு ஒருநாள் ஆட்டங்களில் இருந்தும் ஷ்ரேயஸ் ஐயர் விலகினார். இந்தியாவில் நடைபெற்ற ஐபிஎல் 2021 போட்டியிலும் அவர் பங்கேற்கவில்லை. இதனால் தில்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டனாக ரிஷப் பந்த் நியமிக்கப்பட்டார். அந்த அணி புள்ளிகள் பட்டியலில் 12 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது. 

ஏப்ரல் மாதத்தில் தோள்பட்டைக் காயத்துக்காக அறுவை சிகிச்சை செய்துகொண்டார் ஷ்ரேயஸ் ஐயர். தில்லி அணி, ஷ்ரேயஸ் தலைமையில் கடந்த வருட ஐபிஎல் போட்டியில் இறுதிச்சுற்று வரை முன்னேறியது.  

இந்நிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறவுள்ள ஐபிஎல் 2021 போட்டியில் கலந்துகொள்ளவுள்ளதாக ஷ்ரேயஸ் ஐயர் கூறியுள்ளார். யூடியூப் பேட்டியில் அவர் கூறியதாவது:

என்னுடைய தோள்பட்டைக் காயம் குணமாகிவிட்டது. மீண்டும் பழையபடி விளையாட ஒரு மாத காலமாகும். பயிற்சியைத் தற்போது மேற்கொண்டு வருகிறேன். ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் ஐபிஎல் போட்டியில் நான் விளையாடுவேன். தில்லி அணியின் கேப்டன் பதவி பற்றி எனக்குத் தெரியாது. அந்த முடிவு அணியின் உரிமையாளர்களின் கையில் உள்ளது. தில்லி அணி நன்றாக விளையாடி முன்னிலையில் உள்ளது. அதுதான் எனக்கு முக்கியம். இதுவரை ஐபிஎல் கோப்பையை தில்லி அணி கைப்பற்றவில்லை. அதை நிறைவேற்றுவதே என் லட்சியம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.