எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

இந்திய டி20 அணிக்குத் தேர்வான சூர்யகுமார் யாதவ்: விஜய் ஹசாரே போட்டியில் சிறப்பான பேட்டிங்!

இதுவரை ஒரு சதமும் இரு அரை சதங்களும் எடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ்...

News image
Updated On :1 மார்ச் 2021, 7:11 am

DIN

இந்திய டி20 அணிக்குத் தேர்வான சூர்யகுமார் யாதவ், தற்போது நடைபெற்று வரும் விஜய் ஹசாரே போட்டியில் மிகச்சிறப்பாக விளையாடி வருகிறார்.

மும்பை இந்தியன்ஸ் அணி வீரர் சூர்யகுமார் யாதவ், 2020 ஐபிஎல் போட்டியில் நன்கு விளையாடி 480 ரன்கள் எடுத்தார். மும்பை அணி ஐபிஎல் கோப்பையை வெல்ல முக்கியக் காரணமாக இருந்தார். இதனால் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடருக்கு அவர் தேர்வாகியுள்ளார்.

விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டி தற்போது நடைபெற்று வருகிறது. இதில் சிறப்பாக விளையாடி வருகிறார் சூர்யகுமார் யாதவ்.

ஹிமாசலப் பிரதேசத்துக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் மும்பை அணி முதல் 3 விக்கெட்டுகளை 8 ரன்களுக்கு இழந்தபோதும் விரைவாக ரன்கள் குவித்தார் சூர்யகுமார் யாதவ். 75 பந்துகளில் 15 பவுண்டரிகளுடன் 91 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

இந்த வருட விஜய் ஹசாரே 50 ஓவர் போட்டியில் இதுவரை ஒரு சதமும் இரு அரை சதங்களும் எடுத்துள்ளார் சூர்யகுமார் யாதவ். நல்ல ஃபார்மில் உள்ளதால் இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலும் aவர் சிறப்பாக விளையாடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2021 விஜய் ஹசாரே போட்டியில் சூர்யகுமார் யாதவ்

50(33)
29(27)
133(58)
29(26)
91(75)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.