47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

எனது கடைசி டி20 ஆட்டம் சென்னையில்தான்: எம்எஸ் தோனி நம்பிக்கை

எனது கடைசி டி20 ஆட்டம் சென்னையில்தான் நடைபெறும் என நம்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் சனிக்கிழமை தெரிவித்தார்.

News image
Updated On :20 நவம்பர் 2021, 2:45 pm

DIN


எனது கடைசி டி20 ஆட்டம் சென்னையில்தான் நடைபெறும் என நம்புவதாக சென்னை சூப்பர் கிங்ஸ் கேப்டன் மகேந்திர சிங் சனிக்கிழமை தெரிவித்தார்.

14-வது ஐபிஎல் சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பை வென்றது. இதற்கான பாராட்டு விழா சென்னை கலைவாணர் அரங்கில் நடைபெற்றது. தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், கேப்டன் மகேந்திர சிங் தோனி, பிசிசிஐ செயலர் ஜெய் ஷா, கிரிக்கெட் ஜாம்பவான் கபில் தேவ் உள்ளிட்டோர் இந்த விழாவில் பங்கேற்றனர்.

அங்கு தோனி பேசியது:

"சென்னையுடனான இணைப்பைப் பொறுத்தவரை, 2008-இல் ஐபிஎல் தொடங்கியபோது தொடங்கியது. ஆனால், அதற்கு முன்பே மற்ற வகை கிரிக்கெட்டில் அந்த இணைப்பு தொடங்கிவிட்டது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் அறிமுகமான ஆட்டம் சென்னையில் நடைபெற்றது. அது மறக்க முடியாத நினைவு.

நான் சிஎஸ்கேவால் தேர்வு செய்யப்படுவேன் என்று தெரியாது. நான் புறப்பட்ட இடத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கலாசாரத்தைப் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பை இது வழங்கியது.

நான் தொடர் பயணத்திலேயே இருப்பவர்களைப் போன்றவன். என்னுடைய பெற்றோர்கள் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். பின்னர் அது உத்தரகண்டாக மாறியது. நான் ராஞ்சியில் பிறந்தேன். அது பிகார். பின்னர் ஜார்க்கண்டாக மாறியது. 18 வயதில் ரயில்வே துறையில் மேற்கு வங்கத்தில் பணிபுரிந்தேன். பின்னர் சென்னை வந்தேன். 

சென்னையும், தமிழ்நாடும் எனக்கு நிறைய கற்றுக்கொடுத்துள்ளது. சேப்பாக்கத்தில் விளையாடிய அனைத்து ஆட்டங்களிலும் ரசிகர்கள் நல்ல கிரிக்கெட்டை ஆதரித்தார்கள். எதிரணி நன்றாக விளையாடக் கூடாது என்கிற மனநிலை சேப்பாக்கத்துக்குப் பொருந்தாது.

நாங்கள் சிறப்பாக செயல்படாதபோது, நாங்கள் களத்தில் இல்லாதபோது ரசிகர்கள் எங்களை ஆதரித்தார்கள்.

எனது கடைசி டி20 ஆட்டம் சென்னையில் நடைபெறும் என நம்புகிறேன்" என்றார் தோனி.

Story image

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.