ஷ்ரேயஸ் ஐயரை தில்லி அணி தக்கவைக்காது: அஸ்வின்
ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு தக்கவைக்க வேண்டிய வீரர்களின் பட்டியலில் ஷ்ரேயஸ் ஐயர் இடம்பெற மாட்டார் என அஸ்வின் கூறியுள்ளார்,


ஐபிஎல் ஏலத்துக்கு முன்பு தக்கவைக்க வேண்டிய வீரர்களின் பட்டியலில் ஷ்ரேயஸ் ஐயர் இடம்பெற மாட்டார் என அஸ்வின் கூறியுள்ளார்,
ஐபிஎல் போட்டியில் இரு அணிகள் புதிதாகச் சேர்க்கப்பட்டுள்ளன. அடுத்த வருடம் முதல் லக்னௌ, ஆமதாபாத் நகரங்களை அடிப்படையாகக் கொண்டு இரு புதிய அணிகள் இணைகின்றன. இதில் லக்னௌ அணியை, கொல்கத்தாவைச் சோ்ந்த தொழிலதிபரான சஞ்சீவ் கோயங்காவின் ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ரூ. 7,090 கோடிக்கு வாங்கியுள்ளது. ஆமதாபாத் அணியைச் சா்வதேசப் பங்கு முதலீட்டு நிறுவனமான சிவிசி கேபிடல் ரூ. 5,600 கோடிக்குச் சொந்தமாக்கியுள்ளது. ஆா்.பி.எஸ்.ஜி. குழுமம் ஏற்கெனவே கடந்த 2016-17 காலகட்டத்தில் ரைசிங் புணே சூப்பா் ஜெயன்ட் அணி உரிமையாளராக இருந்தது.
ஐபிஎல் 2022 போட்டியில் விளையாடும் வீரர்களுக்கான மெகா ஏலம் விரைவில் நடைபெறவுள்ளது. இதற்காக வீரர்களைத் தக்கவைப்பது தொடர்பான பணிகளில் அணிகள் இறங்கியுள்ளன.
பழைய 8 அணிகளும் 4 வீரர்களைத் தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்படுகின்றன. ஏலத்துக்கு முன்பு உள்ள வீரர்களின் பட்டியலில் இருந்து 3 வீரர்களைத் தேர்வு செய்துகொள்ள இரு புதிய அணிகளுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. பழைய 8 அணிகள் தக்கவைக்கும் 4 வீரர்களில் மூவர் இந்தியராகவும் ஒருவர் வெளிநாட்டு வீரராகவும் இருக்கலாம். அல்லது தலா இரு வெளிநாட்டு, உள்நாட்டு வீரர்களாகவும் இருக்கலாம். கடந்த மெகா ஏலத்தில் ஆர்டிஎம் என்கிற முறை அமல்படுத்தப்பட்டது. அதன்படி தன் அணியில் இருந்த வீரரை ஏலத்தில் இன்னொரு அணி தேர்வு செய்தால் அதே தொகைக்கு ஆர்டிஎம் முறையில் ஓர் அணி தேர்வு செய்துகொள்ளலாம். இப்போது, ஆர்டிஎம் நடைமுறையை நீக்கியுள்ளது ஐபிஎல் நிர்வாகம். இரு புதிய அணிகள் தேர்வு செய்யும் மூன்று வீரர்களில் இருவர் இந்தியராகவும் ஒருவர் வெளிநாட்டு வீரராகவும் இருக்கலாம். 8 அணிகளும் நவம்பர் இறுதிக்குள் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும் என பிசிசிஐ கூறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் 2022 ஐபிஎல் போட்டிக்கு வீரர்களைத் தக்கவைப்பது தொடர்பாக தனது யூடியூப் தளத்தில் விடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் தில்லி அணியில் விளையாடும் பிரபல வீரர் ஆர். அஸ்வின். கிரிக்கெட் நிபுணர் கெளரவ் சுந்தர்ராமனுடனான உரையாடலில் தில்லி அணி தக்கவைக்கும் வீரர்கள் குறித்துப் பேசினார் அஸ்வின். பிருத்வி ஷாவும் ரிஷப் பந்தும் முதல் இரு தேர்வுகளாக இருப்பார்கள். 3-வது இந்திய வீரர் யார் என்பதுதான் கேள்வியாக உள்ளது என கெளரவ் சுந்தர்ராமன் தனது கருத்துகளைக் கூறினார். அதற்குப் பதில் அளித்த அஸ்வின், ஷ்ரேயஸ் (ஐயர்) இல்லையென்று நினைக்கிறேன். வேறு யாராவது தான் வரவேண்டும். நானும் கிடையாது. அதனால் அக்ஷர் (படேல்)... வேறு யாராவதுதான் இருக்க வேண்டும். ஒருவேளை (3-வதாக தக்கவைக்கும் வீரர்) நானாக இருந்தால் இந்நேரம் தெரிந்திருக்கும் என்று சிரித்தபடி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...