கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

தெ.ஆ. தொடரிலும் பாண்டியா விளையாடுவது சந்தேகம்: தகவல்

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா இடம்பெறுவது சந்தேகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

News image
Updated On :23 நவம்பர் 2021, 8:32 am

DIN

தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்யும் இந்திய அணியில் ஹார்திக் பாண்டியா இடம்பெறுவது சந்தேகம் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்ற இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா, நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரிலிருந்து நீக்கப்பட்டார். 

ஐபிஎல் 2021 போட்டியில் மும்பை அணியில் விளையாடிய பாண்டியா, காயம் காரணமாக ஒரு ஓவர் கூட வீசவில்லை. டி20 உலகக் கோப்பைப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராகப் பந்து வீசாததால் விமர்சனங்களுக்கு ஆளானார். பிறகு நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் பந்துவீசினாலும் ஒரு விக்கெட்டும் அவர் எடுக்கவில்லை. 

பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் பேட்டிங் செய்தபோது தோள்பட்டையில் பாண்டியாவுக்குக் காயம் ஏற்பட்டது. இதனால் உடற்தகுதி காரணமாக நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் பாண்டியா இடம்பெறவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்நிலையில் இந்திய அணி அடுத்த மாதம் தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 3 டெஸ்ட், 3 ஒருநாள், 4 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டிசம்பர் 17 அன்று தொடங்கும் தொடர், ஜனவரி 26 அன்று நிறைவுபெறுகிறது. 

இந்நிலையில் காயம் காரணமாக தெ.ஆ. தொடரிலும் பாண்டியா இடம்பெற மாட்டார் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. பெங்களூரில் உள்ள என்.சி.ஏ.வுக்குச் சென்று உடற்தகுதியை பாண்டியா நிரூபிக்க வேண்டும் எனத் தேர்வுக்குழுவினர் விரும்புவதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிகிறது. 

ஓய்வு பொறுத்துதான் காயத்திலிருந்து எவ்வளவு விரைவாக பாண்டியா மீண்டு வருகிறார் எனத் தெரியும். என்.சி.ஏ.வுக்கு விரைவில் அவர் செல்லவுள்ளார்.  உடற்தகுதியைக் கொண்டு தென்னாப்பிரிக்காவுக்கு அவரை அழைத்துச் செல்லலாமா வேண்டாமா என்பது பற்றி முடிவு செய்யப்படும். தற்போதைக்கு டெஸ்ட் கிரிக்கெட்டுக்குத் தேவையான உடற்தகுதி பாண்டியாவிடம் இல்லை. காயத்திலிருந்து குணமாக இன்னும் சிறிது காலமாகும். உடற்தகுதியை நிரூபித்து விளையாட அவர் தயாராகிவிட்டால் தெ.ஆ.வுக்கு எதிரான ஒருநாள், டி20 தொடரில் சேர்க்கப்படுவார் என பிசிசிஐ தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.