தம்பிக்குப் பதில் அண்ணன்: டி20 உலகக் கோப்பை இங்கிலாந்து அணியில் மாற்றம்!
டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக சாம் கரனுக்குப் பதில் அவரது அண்ணன் டாம் கரன் சேர்க்கப்பட்டுள்ளார்.


டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் காயம் காரணமாக சாம் கரனுக்குப் பதில் அவரது அண்ணன் டாம் கரன் சேர்க்கப்பட்டுள்ளார்.
இங்கிலாந்து ஆல்-ரௌண்டர் சாம் கரன் ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார். அவருக்குக் காயம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, நடப்பு ஐபிஎல் தொடர் மற்றும் டி20 உலகக் கோப்பைத் தொடரிலிருந்து விலகியுள்ளார்.
இதையும் படிக்க | சாம் கரன் விலகல்: சிஎஸ்கேவுக்குப் பெரும் பின்னடைவு!
இதுபற்றி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிவிப்பு:
"காயம் காரணமாக ஐசிசியின் டி20 உலகக் கோப்பை தொடரிலிருந்து சாம் கரன் விலகுகிறார். ராஜஸ்தான் ராயல்ஸுக்கு எதிரான சனிக்கிழமை ஆட்டத்துக்குப் பிறகு கரனுக்கு முதுகு வலி ஏற்பட்டது. அவருக்குக் காயம் இருப்பதை ஸ்கேன் முடிவுகள் வெளிப்படுத்தின. அடுத்த இரண்டு நாள்களில் அவர் பிரிட்டன் புறப்படுவார். இங்கிலாந்து கிரிக்கெட் வாரிய மருத்துவக் குழுவால் அவருக்கு மேற்கொண்டு ஸ்கேன் செய்யப்பட்டு முழு பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் சாம் கரனின் சகோதரர் டாம் கரன் சேர்க்கப்பட்டுள்ளார். மேலும் ரீஸ் டாப்லே தயார்நிலை வீரராக சேர்க்கப்பட்டுள்ளார்.
ஐபிஎல் தொடரில் பங்கேற்காத இங்கிலாந்து வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகள் இன்று (செவ்வாய்க்கிழமை) மஸ்கட் வந்தடைந்தனர். அக்டோபர் 16 வரை அவர்கள் ஓமனில் இருப்பார்கள்."
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...