மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

தோனி போல ஒரு விக்கெட் கீப்பர் இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை: ரிஷப் பந்தை சீண்டும் விராட் கோலி (விடியோ)

தோனிக்குப் பிறகு ஒரு நல்ல விக்கெட் கீப்பர் இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை. - கோலி

News image
Updated On :15 அக்டோபர் 2021, 7:32 am

DIN

விராட் கோலியும் ரிஷப் பந்தும் வேடிக்கையாகப் பேசிக்கொள்ளும் விடியோவை ஸ்டார் போர்ட்ஸ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

டி20 உலகக் கோப்பை - ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் அக்டோபர் 17 முதல் நவம்பர் 14 வரை நடைபெறுகிறது. துபை, அபுதாபி, ஷார்ஜா, ஓமன் என நான்கு பகுதிகளில் டி20 உலகக் கோப்பை நடைபெறவுள்ளது. இந்தியாவில் நடத்தப்படவிருந்த டி20 உலகக் கோப்பை போட்டி, கரோனா சூழல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. தகுதிச்சுற்று ஆட்டங்கள் முடிந்தபிறகு அதிலிருந்து தேர்வாகும் 4 அணிகள், ஏற்கெனவே தேர்வான 8 அணிகளுடன் இணைந்து பிரதான சுற்றான சூப்பர் 12-ல் அக்டோபர் 23 முதல் போட்டியிடவுள்ளன. இந்திய அணி தனது முதல் ஆட்டத்தை அக்டோபர் 24 அன்று பாகிஸ்தானுக்கு எதிராக விளையாடுகிறது. 

இந்நிலையில் டி20 உலகக் கோப்பை பயிற்சி ஆட்டங்களுக்கான விளம்பரமாக விராட் கோலி - ரிஷப் பந்த் இடையிலான வேடிக்கையான உரையாடல் கொண்ட விடியோவை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது.

விடியோ கால் மூலமாக ரிஷப் பந்திடம் பேசுகிறார் விராட் கோலி.

ரிஷப், டி20 கிரிக்கெட்டில் சிக்ஸர்கள் தான் வெற்றியைத் தரும் - கோலி

கவலை வேண்டாம். தினமும் நான் பயிற்சி எடுக்கிறேன். ஒரு விக்கெட் கீப்பர் தான் உலகக் கோப்பையில் சிக்ஸர் அடித்து இந்திய அணி வெல்ல காரணமாக இருந்தார் - ரிஷப் பந்த் (2011 உலகக் கோப்பைப் போட்டியில் தோனி சிக்ஸர் அடித்ததைக் குறிப்பிடுகிறார்.)

ஆமாம். ஆனால் தோனிக்குப் பிறகு ஒரு நல்ல விக்கெட் கீப்பர் இந்தியாவுக்குக் கிடைக்கவில்லை. - கோலி

நான் தான் இந்தியாவின் விக்கெட் கீப்பர் - ரிஷப் பந்த்

அணியில் ஏராளமான விக்கெட் கீப்பர்கள் உள்ளார்கள். பயிற்சி ஆட்டங்களில் யார் விளையாடுகிறார்கள் என்று பார்ப்போம் - கோலி.

இந்திய அணி அக்டோபர் 18 அன்று இங்கிலாந்தையும் அக்டோபர் 20 அன்று ஆஸ்திரேலியாவையும் பயிற்சி ஆட்டங்களில் எதிர்கொள்கிறது. இரவு 7.30 மணிக்குத் தொடங்கும் இரு ஆட்டங்களும் தொலைக்காட்சியில் நேரலையாக ஒளிபரப்பாகின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.