டெஸ்ட் தொடர்: இங்கிலாந்து அணிக்குப் புதிய துணை கேப்டன்
இங்கிலாந்து அணியின் புதிய துணை கேப்டனாக மொயீன் அலி தேர்வாகியுள்ளார்.


இங்கிலாந்து அணியின் புதிய துணை கேப்டனாக மொயீன் அலி தேர்வாகியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான 5 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாடி வருகிறது. 3 டெஸ்டுகள் முடிந்த நிலையில் இரு அணிகளும் 1-1 என சமநிலையில் உள்ளன. 4-வது டெஸ்ட் லண்டன் ஓவல் மைதானத்தில் நாளை தொடங்குகிறது.
இங்கிலாந்து அணியின் துணை கேப்டனாக இருந்த பட்லரின் மனைவிக்கு 2-வது குழந்தை விரைவில் பிறக்கவுள்ளது. இதனால் 4-வது டெஸ்டிலிருந்து பட்லர் விலகியுள்ளார். கடைசி டெஸ்டில் அவர் பங்கேற்பது குறித்த தகவலும் உறுதியாகவில்லை.
இதையடுத்து 4-வது டெஸ்டுக்கான இங்கிலாந்து அணியின் புதிய துணை கேப்டனாக மொயீன் அலி தேர்வாகியுள்ளார்.
34 வயது மொயீன் அலி, இங்கிலாந்து அணிக்காக 63 டெஸ்டுகளில் விளையாடி 2879 ரன்களும் 193 விக்கெட்டுகளும் எடுத்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...