இந்திய அணி
இந்திய அணி

நியூசி. டெஸ்ட் தொடர்: இந்திய அணி அறிவிப்பு

முதல் டெஸ்டில் விராட் கோலி விளையாடாததால் ரஹானே தலைமையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது.


நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 

நியூசிலாந்து அணி இந்தியாவுக்குச் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டுகள், 3 டி20 ஆட்டங்களில் விளையாடுகிறது. டி20 தொடர் நவம்பர் 17 அன்று தொடங்கி, நவம்பர் 21 அன்று நிறைவுபெறுகிறது. டெஸ்ட் தொடர் நவம்பர் 25-ல் தொடங்கி, டிசம்பர் 7 அன்று நிறைவுபெறுகிறது.

டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா தலைமையிலான அணியில் தமிழக வீரர் அஸ்வின் இடம்பெற்றுள்ளார். கோலி, ஜடேஜா, பும்ரா, ஷமி ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை அணியில் இடம்பெற்ற பாண்டியா, வருண் சக்ரவர்த்தி, ராகுல் சஹார், ஷர்துல் தாக்குர் இடம்பெறவில்லை. சுழற்பந்து வீச்சாளர் சஹால் மீண்டும் தேர்வாகியுள்ளார்.

இந்நிலையில் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் டெஸ்டில் விராட் கோலி விளையாடாததால் ரஹானே தலைமையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. 2-வது டெஸ்டில் விராட் கோலி அணியினருடன் இணைந்து கேப்டனாகச் செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா, ரிஷப் பந்த், பும்ரா, ஷமி ஆகியோர் டெஸ்ட் தொடரில் பங்கேற்கவில்லை. புஜாரா துணை கேப்டனாக அறிவிக்கப்பட்டுள்ளார்.

முதல் டெஸ்ட் கான்பூரில் நவம்பர் 25 அன்றும் 2-வது டெஸ்ட் மும்பையில் டிசம்பர் 3 அன்றும் தொடங்குகின்றன. 
    
இந்திய டெஸ்ட் அணி

ரஹானே (முதல் டெஸ்டுக்கு கேப்டன்), கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா (துணை கேப்டன்), ஷுப்மன் கில், ஷ்ரேயஸ் ஐயர், சஹா  (விக்கெட் கீப்பர்), கே.எஸ். பரத் (விக்கெட் கீப்பர்), ஜடேஜா, ஆர். அஸ்வின், அக்‌ஷர் படேல், ஜெயந்த் யாதவ், இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், சிராஜ், பிரசித் கிருஷ்ணா, விராட் கோலி (2-வது டெஸ்டில் விளையாடி அணிக்குத் தலைமை தாங்குவார்). 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com