ஐபிஎல் அணியை வாங்க மான்செஸ்டர் யுனைடெட் உரிமையாளர்கள் விருப்பம்

பிரபல கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர்கள், ஐபிஎல் அணியை வாங்க...
ஐபிஎல் அணியை வாங்க மான்செஸ்டர் யுனைடெட் உரிமையாளர்கள் விருப்பம்

பிரபல கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர்கள், ஐபிஎல் அணியை வாங்க ஆர்வம் செலுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

2008 முதல் ஐபிஎல் போட்டி நடைபெற்று வருகிறது. தற்போது 8 அணிகள் போட்டியிடுகின்றன. ஐபிஎல் போட்டியில் இரு புதிய அணிகளைச் சேர்க்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை ஆகஸ்ட் மாத இறுதியில் பிசிசிஐ வெளியிட்டது. புதிய ஐபிஎல் அணிக்கான ஏல விண்ணப்பத்தை அக்டோபர் 5 வரை பெற்றுக்கொள்ளலாம். விதிமுறைகளுக்கு ஏற்ப தகுதியுள்ள நிறுவனங்களால் மட்டுமே ஏலத்தில் கலந்துகொள்ள முடியும் என பிசிசிஐ அறிக்கை வெளியிட்டது.

இதையடுத்து 2022 முதல் ஐபிஎல் போட்டியில் 10 அணிகள் போட்டியிடவுள்ளன. இரு புதிய அணிகளால் பிசிசிஐக்குக் கூடுதலாக ரூ. 7000 கோடி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தைக் கொண்டிருப்பதால் எப்படியும் ஆமதாபாத் நகரின் பெயரில் ஓர் அணி உருவாகும் என அறியப்படுகிறது.

ஏல விண்ணப்பத்தைப் பெறுவதற்கான காலக்கெடுவை அக்டோபர் 20 வரை நீட்டித்தது பிசிசிஐ. பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைகள் எழுந்ததால் இம்முடிவை பிசிசிஐ எடுத்தது. 

இந்நிலையில் பிரபல கால்பந்து கிளப்பான மான்செஸ்டர் யுனைடெட் அணியின் உரிமையாளர்களான அமெரிக்காவைச் சேர்ந்த கிளேசர் குடும்பத்தினர், ஐபிஎல் போட்டியில் புதிய அணியை வாங்க ஆர்வம் காண்பித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தக் காரணத்துக்காகத்தான் ஏல விண்ணப்பத்தைப் பெறுவதற்கான காலக்கெடுவை பிசிசிஐ நீட்டித்ததாகவும் அறியப்படுகிறது. ஏல விண்ணப்பத்தைப் பெற்றுக்கொண்ட கிளேசர் குடும்பத்தினர், புதிய அணிகளுக்கான ஏலத்தில் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இரு புதிய அணிகள் குறித்த விவரங்களை அக்டோபர் 25 அன்று துபையில் பிசிசிஐ வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com